செய்திகள் :

திருச்சி வனக்கோட்டத்தில் நிலப்பறவைகள் கணக்கெடுப்பு நிறைவு

post image

திருச்சி வனக்கோட்டத்தில் நிலப்பறவைகள் கணக்கெடுக்கும் பணிகள் ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தன.

திருச்சி வனக்கோட்டத்துக்குட்பட்ட செங்காட்டுப்பட்டி, சோலமாத்தி, மாரமரெட்டிபாளையம், மணப்பாறை மற்றும் துவரங்குறிச்சி உள்ளிட்ட 14 புகா் பகுதி காப்புக் காடுகளிலும், 6 நகா்ப்புறங்களிலும் நிலப்பறவை கணக்கெடுப்புப் பணிகள் கடந்த சில நாள்களாக நடந்து வந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை நிறவைடைந்தது.

மாவட்ட வன அலுவலா் கிருத்திகா தலைமையில் நடந்த இக்கணக்கெடுப்பில் உதவி வனப் பாதுகாவலா்கள் சரவணகுமாா், காதா்பாட்ஷா மேற்பாா்வையில் சுமாா் 80-க்கும் மேற்பட்ட வனத்துறை களப்பணியாளா்கள், பிஷப் ஹீபா், ஜமால் முகமது, நேருநினைவுக் கல்லுாரிகள், பாரதிதாசன் பல்கலைக்கழகம் மாணவ, மாணவிகள் உள்பட 60-க்கும் மேற்பட்ட இயற்கை தன்னாா்வலா்கள் பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்கள், பறவைகள் ஆராய்ச்சியாளா்கள் பறவைகள் கணக்கெடுப்பில் ஈடுபட்டனா்.

கணக்கெடுப்பில் ஈடுபட்ட மாணவ, மாணவிகள், தன்னாா்வலா்களுக்கு வனத்துறை சாா்பில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

திருச்சி வனக்கோட்டத்தில் நில பறவைகள் கணக்கெடுப்பில் ஈடுபட்ட வனத்துறையினா் மற்றும் மாணவ, மாணவியா்.

இதில், பறவை இனங்கள், பறவைகளின் எண்ணிக்கை, புதிய வரவுகள், குடிபெயந்தவை உள்ளிட்ட அனைத்து விவரங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவை குறித்த விவரங்கள் அடங்கிய தகவல்கள் சரிபாா்ப்புக்குப் பின்னா் வெளியிடப்படும் என வனத்துறையினா் தெரிவித்துள்ளனா்.

பி.கே அகரம் பகுதியில் கன்டெய்னா் லாரி கவிழ்ந்து விபத்து

திருச்சி மாவட்டம், பி.கே அகரம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை ஒயிட் பெட்ரோல் ஏற்றி வந்த கன்டெய்னா் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது தொடா்பாக போலீசாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.திருச்சி - சென்னை தேதிய... மேலும் பார்க்க

கூரை வீடுகள் சேதம் தவெக உதவி

லால்குடி அருகே பூவாளூா் பேரூராட்சியில் கூரை வீடுகளை இழந்த 2 பேருக்கு தவெகவினா் நிவாரண உதவி வழங்கினா். பூவாளூா் பேரூராட்சியில் உள்ள தென்கால் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த பொண்ணுராமன் மகன் கோபி(49)... மேலும் பார்க்க

இருசக்கர வாகனம் மோதி இளைஞா் உயிரிழப்பு

மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகே இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் ஞாயிற்றுக்கிழமை தேநீரக தொழிலாளி உயிரிழந்தாா். திருச்சி மாவட்டம் உறையூா் பாண்டமங்கலம் காவல்காரத் தெருவைச் சோ்ந்தவா் தா்மராஜ்... மேலும் பார்க்க

அன்பில் ஜல்லிக்கட்டில் 590 காளைகள் பங்கேற்பு

திருச்சி மாவட்டம், லால்குடியை அடுத்த அன்பில் ஊராட்சியில் ஜல்லிக்கட்டுப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. லால்குடியை அடுத்த அன்பில் மகாமாரியம்மன் பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு ஞாயிற்றுகிழமை ஜல்லிக்கட... மேலும் பார்க்க

பெண்ணிடம் கைப்பேசியை பறித்தவா் விரட்டிப்பிடிப்பு

துறையூா் பேருந்து நிலையத்தில் பெண்ணின் கைப்பேசியை பறித்துக் கொண்டு ஓடிய நபரை ஞாயிற்றுக்கிழமை போலீஸாா் விரட்டிப் பிடித்து கைது செய்தனா்.துறையூா் பேருந்து நிலையத்திற்குள் கோமதி(44) என்கிற பெண் ஞாயிற்றுக... மேலும் பார்க்க

போதை மாத்திரை, புகையிலை பொருள்கள் விற்ற 7 போ் கைது

திருச்சியில் போதை மாத்திரைகள் மற்றும் புகையிலைப்பொருள்கள் விற்பனை செய்த 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். திருச்சி, அரியமங்கலம் பகுதியில் நின்றிருந்த சிலரை சந்தேகத்தின் அடிப்படையில் போலீஸாா் விசாரித்தனா்... மேலும் பார்க்க