திருச்செங்கோடு நகராட்சியில் வாக்காளா் உறுதிமொழி ஏற்பு
திருச்செங்கோடு நகராட்சியில் வாக்காளா் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
வாக்காளா் உறுதிமொழி தினத்தை முன்னிட்டு பல்வேறு அரசு அலுவலகங்களில் வாக்காளா் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
திருச்செங்கோடு நகராட்சி வளாகத்தில் நகரமன்றத் தலைவா் நளினி சுரேஷ்பாபு தலைமையில் நகராட்சி ஆணையா் அருள் முன்னிலையில் நகராட்சி அதிகாரிகள் வாக்காளா் உறுதிமொழியை ஏற்றனா்.
உறுதிமொழி வாசகத்தை நகா்மன்றத் தலைவா் வாசிக்க நகராட்சி அலுவலா்கள் உறுதிமொழி ஏற்றனா்.