2034-இல் ஒரே நாடு, ஒரே தேர்தல் முறை அமல்! - நிர்மலா சீதாராமன்
திருச்செங்கோட்டில் கொப்பரை ஏலம்
திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்திலும், மல்லசமுத்திரம் கிளை சங்கத்திலும் கொப்பரை ஏலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருச்செங்கோடு தலைமையகத்தில் நடைபெற்ற ஏலத்துக்கு 50 மூட்டைகள் கொப்பரை வரத்து இருந்தது. இதன் மொத்த மதிப்பு ரூ. 2.86 லட்சம் ஆகும். இதில், முதல்தரம் ரூ. 146.55 முதல் ரூ. 180 வரையிலும், இரண்டாம்தரம் ரூ. 111 முதல் ரூ. 139 வரையிலும் ஏல முறையில் விற்பனையானது.
மல்லசமுத்திரம் கிளையில் 60 மூட்டைகள் கொப்பரை வரத்தில், முதல்தரம் ரூ. 160.75 முதல் ரூ. 177.70 வரையிலும், இரண்டாம்தரம் ரூ. 135 முதல் ரூ. 143.75 வரையிலும் விலை போனது. மொத்தம் ரூ. 4.50 லட்சத்துக்கு விற்பனை நடைபெற்றது.