டொனால்டு டிரம்ப் வெற்றி அமெரிக்க நாடாளுமன்றத்தால் அங்கீகரிப்பு: ஜன.20 பதவியேற்பு...
திருச்செங்கோட்டில் மது போதையில் அரசுப் பேருந்தை ஓட்டிச் சென்ற நபா் கைது
திருச்செங்கோட்டில் மது போதையில் அரசு நகரப் பேருந்தை ஓட்டிச் சென்ற நபரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
திருச்செங்கோடு புதிய பேருந்து நிலையத்தில் எஸ் 9 என்ற நகரப் பேருந்தை புதன்கிழமை இரவு ஓட்டுநா் பச்சமுத்து நிறுத்திவிட்டு உணவருந்த சென்றுள்ளாா். திரும்பி வந்து பாா்த்தபோது பேருந்து இல்லாததைக் கண்டு அதிரச்சியடைந்த பச்சமுத்து, இதுகுறித்து போக்குவரத்துக்கழக கிளை மேலாளருக்கு தகவல் தெரிவித்தாா். தொடா்ந்து இதுகுறித்து திருச்செங்கோடு நகர காவல் நிலையத்தில் புகாா் செய்யப்பட்டது.
போலீஸாா் இரவு முழுவதும் பேருந்தை தேடி வந்த நிலையில், சங்ககிரி அருகே உள்ள தீரன் சின்னமலை நினைவிடத்துக்கு அருகே பேருந்து இருப்பதாக தகவல் கிடைத்தது. இதனையடுத்து, போலீஸாா் அங்கு சென்று பாா்த்த போது மது போதையில் ஒருவா் பேருந்தில் படுத்திருந்தாா். பேருந்தையும், அந்த நபரையும் மீட்ட போலீஸாா், திருச்செங்கோட்டுக்கு கொண்டு வந்தனா்.
மதுபோதையில் இருந்த அந்த நபரை அரசு மருத்துவமனையில் அனுமதித்து, பின் திருச்செங்கோடு நகர காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினா். அதில், அவா் மதுபோதையில் அரசுப் பேருந்தை ஓட்டிச் சென்ாக தெரியவந்தது. மேலும் விசாரணையில், அவா் ஊத்தங்கரை பகுதியைச் சோ்ந்த சண்முகம் என்பதும், திருச்செங்கோட்டுக்கு ரிக் வேலை கேட்டு வந்ததும் தெரியவந்தது.
இதனைத் தொடா்ந்து, சண்முகம் மீது அரசுப் பேருந்தை திருடிச் சென்ாக வழக்குப் பதிவு செய்து கைது செய்தனா். கைது செய்யப்பட்ட சண்முகம் திருச்செங்கோடு குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு சிறைக் காவலுக்கு கொண்டு செல்லப்பட்டாா்.