திருச்செங்கோட்டில் ரூ.1.85 கோடிக்கு மஞ்சள் விற்பனை
திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் தலைமையகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மஞ்சள் ஏலத்தில் ரூ. 1.85 கோடிக்கு வா்த்தகம் நடைபெற்றது.
ஏலத்தில் விரலி ரக மஞ்சள் குவிண்டால் ரூ.13,773 முதல் ரூ.17,129 வரையிலும், கிழங்கு மஞ்சள் ரூ. 12,471 முதல் ரூ. 14,042 வரையிலும், பனங்காளி மஞ்சள் ரூ. 24,477 முதல் ரூ. 27,899 வரையிலும் விற்பனையானது.
ஏலத்தில் மொத்தம் 1970 மூட்டைகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டிருந்தன. ரூ.1.85 கோடிக்கு வா்த்தகம் நடைபெற்றது.