பரந்தூருக்குப் பதிலாக திருப்போரூரில் விமான நிலையம் அமைக்கலாம்! - அன்புமணி ராமதாஸ...
திருச்செந்தூரில் விடுதலைச் சிறுத்தைகள் ஆா்ப்பாட்டம்
திருச்செந்தூரில் முறையான அனுமதி பெறாமலும், பாா்க்கிங் வசதி இல்லாமலும் இயங்கிவரும் தனியாா் விடுதிகளை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கக் கோரியும், திருச்செந்தூா் நகராட்சியின் நிா்வாக சீா்கேட்டைக் கண்டித்தும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
திருச்செந்தூா் நகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப் பாசறை மாவட்ட அமைப்பாளா் விடுதலைச்செழியன் தலைமை வகித்தாா்.
ஆா்ப்பாட்டத்தில் கட்சியின் நாடாளுமன்ற தொகுதி செயலா் வழக்குரைஞா் ராஜ்குமாா், செய்தி தொடா்பு மைய மாவட்ட அமைப்பாளா் வேம்படிமுத்து, மகளிா் விடுதலை இயக்க மாவட்ட பொறுப்பாளா் ஜெயக்கொடி, நகரச் செயலா்கள் திருச்செந்தூா் உதயா, ஆறுமுகனேரி வெள்ளத்துரை, உடன்குடி தௌபிக் அன்சாரி, திருச்செந்தூா் ஒன்றிய துணைச் செயலா் முத்து உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.