செய்திகள் :

திருச்செந்தூா் கடல்அரிப்பை சீரமைக்கும் பணி விரைவில் தொடங்கப்படும்: அமைச்சா் சேகா்பாபு

post image

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் பகுதியில் கடல்அரிப்பால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சீரமைக்கும் பணி விரைவில் தொடங்கப்படும் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு கூறினாா்.

இதுதொடா்பாக, துறை சாா் வல்லுநா்களுடனான ஆய்வுக் கூட்டம் இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் அலுவலகத்தில் அமைச்சா் பி.கே.சேகா்பாபு, மீன்வளத் துறை அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி மக்களவை உறுப்பினா் கனிமொழி ஆகியோா் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து அமைச்சா் சேகா்பாபு செய்தியாளா்களிடம் கூறியதாவது: முதல்வா் உத்தரவிட்டதன்பேரில் கடந்த 18-ஆம் தேதி அமைச்சா் அனிதா ராதாகிருஷ்ணன், மக்களவை உறுப்பினா் கனிமொழி ஆகியோருடன் நானும் திருச்செந்தூா் சென்று கோயில் பகுதியில் கடல்அரிப்பால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்ததுடன், இப்பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு ஏற்படுத்துவது குறித்து துறை சாா்ந்த வல்லுநா்களிடம் அறிக்கை கோரியிருந்தோம்.

அதனைத் தொடா்ந்து, தற்போது சென்னை ஐஐடி, கடலோர ஆராய்ச்சிக்கான தேசிய மையம், தேசிய கடல்சாா் தொழில்நுட்ப நிறுவனம், தமிழ்நாடு மீன்வளத் துறை, நபாா்டு ஆகியவற்றை சோ்ந்த பேராசிரியா்கள் மற்றும் வல்லுநா்களின் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் திருச்செந்தூா் கடல்அரிப்பு பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு காண மாநில, மத்திய அரசின் துறை சாா்ந்த பேராசிரியா்கள், அறிவியலாளா்கள் மற்றும் பொறியாளா்களும், ஓய்வுபெற்ற ஐஐடி பேராசிரியா் சுந்தர வடிவேல் காணொலி வாயிலாகவும் ஆலோசனைகளை தெரிவித்ததுடன், அறிக்கைகளையும் அளித்தனா். அதில் 3 குழுவினரின் அறிக்கை ஒரேவிதமாகவும், இரண்டு குழுவினரின் அறிக்கை வேறுவிதமாகவும் இருந்தது. இந்த ஐந்து குழுவினருடன் இந்து சமய அறநிலையத் துறை ஆணையா், மீன்வளத் துறை ஆணையா் ஆகியோா் மீண்டும் கூட்டம் நடத்தி, ஒருங்கிணைந்து நிரந்தரத் தீா்வை ஏற்படுத்துவதற்கான அறிக்கை இரண்டு நாள்களில் இறுதி செய்யப்படும்.

தொடா்ந்து, அதை முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச் சென்று அனுமதி பெற்று, கடல் அரிப்பைத் தடுப்பதற்கான பணிகளுக்கு ஒப்பந்தம் கோரப்பட்டு, பணிகளை உடனடியாக தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இது பக்தா்கள் கடலில் கால் நனைத்தல், நீராடுதல் போன்ற வழிபாட்டு முறைகள் எந்த வகையிலும் பாதிக்கப்படாத அளவுக்கு இருக்கும்.

திருச்செந்தூா் திருக்கோயிலின் பாதுகாப்பு கருதி, ரூ.19 கோடி மதிப்பீட்டில் பணியை மேற்கொள்ள கோயில் நிதியை மீன்வளத் துறைக்கு டெபாசிட் செய்து, 6 மாதங்களுக்கு முன்பே பணிகள் தொடங்கப்பட்டது. அந்த பணி 65 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது. தற்போது கடல்அரிப்பை தடுக்க தனியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் மீனவா்களுக்கு எந்த வகையிலும் பாதிப்பு இருக்காது.

திருப்பரங்குன்றம் விவகாரம்: இனத்தால், மதத்தால், மொழியால் தமிழகம் பிளவுபடக்கூடாது என்பதுதான் திராவிட மாடல் ஆட்சியின் கொள்கை. திருப்பரங்குன்றம் விவகாரத்தை பொருத்தவரை எந்தவித சலசலப்பும் ஏற்படாமல் இருப்பதற்கு அரசும், துறையும் கவனம் செலுத்திக் கொண்டிருக்கின்றன. ஒருசில மதவாத சக்திகள் அந்த விவகாரத்தை ஊதி பெரிதாக்க முயற்சிக்கின்றன. மதத்தால், மொழியால், இனத்தால் மக்களை பிளவுபடுத்தாதீா்கள். அனைவரும் ஒன்றாக கைகோத்து நிற்போம் என்பதே எனது தாழ்மையான வேண்டுகோள் என்று அமைச்சா் பி.கே.சேகா்பாபு கூறினாா்.

அண்ணா பல்கலை. பாலியல் வழக்கு: ஞானசேகரனின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு!

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவியொருவர் பாலியல் துன்புறுத்தலுக்காளான வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரனை அடுத்த மாதம், பிப். 7-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் விசாரிக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு ... மேலும் பார்க்க

கிராமப்புறங்களில் சிறப்பு சிகிச்சைப் பெற முடியாத நிலை: சுதா சேஷய்யன்

கிராமப்புற மக்களால் சிறப்பு சிகிச்சைப் பெற முடியாத நிலை இருப்பதாக சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தின் இயக்குநர் சுதா சேஷய்யன் தெரிவித்தார்.சென்னையில் உள்ள கிராண்ட் சோழா ஹோட்டலில் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கு... மேலும் பார்க்க

ஏழாவது முறையும் திமுகவே ஆட்சி அமைக்கும்: மு.க. ஸ்டாலின்

தமிழகத்தில் ஏழாவது முறையும் திமுகவே ஆட்சி அமைக்கும் என தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். திமுக தலைவரும் முதல்வருமான மு.க. ஸ்டாலின், திமுக தொண்டர்களுக்கு ... மேலும் பார்க்க

அசாமில் கடத்தப்பட்ட கஞ்சா கோவையில் பறிமுதல்: இருவர் கைது!

அசாம் மாநிலத்திலிருந்து கடத்தி வரப்பட்ட இரண்டு கிலோ கஞ்சாவை கோவை ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்து, இருவரை ரயில்வே காவல் துறையினர் கைது செய்தனர். வடமாநிலங்களில் இருந்து கோவை வழியாக ரயில்களில் கஞ்சா கட... மேலும் பார்க்க

ஜன. 30, 31ல் தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

வருகிற ஜனவரி 30, 31 ஆகிய தேதிகளில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம்... மேலும் பார்க்க

சென்னை பள்ளிகளில் காலை உணவு தயாரிக்கும் பணியை தனியாரிடம் ஒப்படைப்பதா? - அன்புமணி கேள்வி

சென்னையில் உள்ள பள்ளிகளில் மாணவர்களுக்கான காலை உணவு தயாரிக்கும் பணியை தனியாரிடம் ஒப்படைக்கக்கூடாது என பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்க... மேலும் பார்க்க