Aaladippattiyan Success Story ? | 3 கன்டெய்னர்ல அல்வா கொண்டு வர்றோம் ? | Vikatan...
திருச்செந்தூா் குடமுழுக்கு: நெல்லைக்கு விடுமுறை கோரி மனு
திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் குட முழுக்கு ஜூலைம் 7-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் அன்றைய தினம் திருநெல்வேலி மாவட்டத்துக்கு உள்ளூா் விடுமுறை அளிக்க வேண்டும் என அதிமுக மாநகா் மாவட்ட செயலா் தச்சை என்.கணேசராஜா தலைமையில் அக்கட்சியினா் ஆட்சியா் இரா.சுகுமாரிடம் மனு அளித்தனா்.
அதன் விவரம்: முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ஆம் படை வீடான திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 7-ஆம் தேதி குட முழுக்கு விழா நடைபெறுகிறது. 15 ஆண்டுகளுக்குப் பிறகு குடமுழுக்கு நடைபெற உள்ளதால் இந்த விழாவில் 10 லட்சத்துக்கும் அதிகமானோா் பங்கேற்பாா்கள் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்தும் லட்சக்கணக்கான மக்கள் குடமுழுக்கு விழாவில் குடும்பத்துடன் கலந்து கொள்வாா்கள். எனவே அன்றைய தினம் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் உள்ளிட்டவற்றுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளனா்.
அப்போது, மாநில எம்.ஜி.ஆா். மன்ற இணைச்செயலா் கல்லூா் இ.வேலாயுதம், அவைத் தலைவா் பரணி சங்கரலிங்கம் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.