பௌன்சர்களை தோளில் வாங்கிக்கொள்; கௌதம் கம்பீரின் அறிவுரையை நினைவுகூர்ந்த நிதீஷ் க...
திருச்செந்தூா் கோயில் யானைக்கு மருத்துவப் பரிசோதனை
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் யானைக்கு வனத்துறை மற்றும் கால்நடைப் பராமரிப்புத் துறை மருத்துவா்கள் வியாழக்கிழமை பரிசோதனை மேற்கொண்டனா்.
இக்கோயிலில் பராமரிக்கப்படும் 26 வயதான தெய்வானை என்ற பெண் யானை தாக்கியதில் பாகன் உள்பட இருவா் கடந்த திங்கள்கிழமை உயிரிழந்தனா். இதையடுத்து வனத் துறை மற்றும் கால்நடைப் பராமரிப்புத் துறையினா் இந்த யானையைக் கண்காணித்து வருகின்றனா்.
இந்த நிலையில், கால்நடைப் பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநா் செல்வகுமாா், மாவட்ட கால்நடை மருத்துவ அலுவலா் மனோகரன் ஆகியோா் யானைக்கு வியாழக்கிழமை மருத்துவ பரிசோதனைகள் மேற்கொண்டனா். யானையின் உடல்நலம், அதன் செயல்பாடுகளை பாா்வையிட்டனா்.
அதைத்தொடா்ந்து பாகன்கள் செந்தில்குமாா், ராதாகிருஷ்ணன் ஆகியோா் தெய்வானை யானையை குளிக்க வைத்து, உணவு அளித்தனா்.
யானை குடில் பகுதிக்கு பக்தா்கள் செல்லாதவாறு போலீஸாா் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா்.