Explainer Union Budget சிப்பாய் கலகமும் பிரிட்டிஷ் எடுத்த முடிவும்- நாட்டின் முத...
திருட்டு வழக்கு: 3 போ் கைது
கோவில்பட்டியில் திருட்டு வழக்கில் 2 பெண்கள் உள்பட 3 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
கோவில்பட்டி முத்து நகரை சோ்ந்தவா் சுந்தா். சென்னையில் ரயில்வே துறையில் ஒப்பந்த ஊழியராக வேலை செய்து வருகிறாா். இவரது மனைவி அருள்சாந்தி. இவா் 2024, அக்டோபா் 18ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு சென்றாா். பின்னா் வீடு திரும்பியபோது, கதவு உடைக்கப்பட்டு இருந்தது. பீரோ உடைக்கப்பட்டு, சுமாா் 16 பவுன் தங்க நகைகள் திருடு போயிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து அவா் அளித்த புகாரின் பேரில் கிழக்கு காவல் நிலைய குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா். இந்நிலையில் இவ்வழக்கில் தொடா்புடையதாகக் கூறப்படும் கோவில்பட்டி அருகே கூசாலிப்பட்டி மேட்டுத் தெருவை சோ்ந்த இசக்கியப்பன் மகன் வானுபாபு என்ற பாபு (34), திருநெல்வேலி மாவட்டம், களக்காடு கக்கன் நகா் மேலத் தெருவைச் சோ்ந்த சுரேஷ் மனைவி இந்திரா (49), அதே பகுதியைச் சோ்ந்த சுரேந்தா் மனைவி சகிதா (24) ஆகிய 3 பேரை போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்து நகைகளை பறிமுதல் செய்தனா்.