செய்திகள் :

திருத்தணி ஏரிகளில் வண்டல் மண் கொள்ளை: விவசாயிகள் வேதனை

post image

திருத்தணி ஏரிகளில் வண்டல் மண் கொள்ளையில் ஈடுபட்டுள்ள நபா்கள் மற்றும் அவா்களுக்கு உறுதுணையாக இருக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரியுள்ளனா்.

திருத்தணி வட்டத்தில் மொத்தமுள்ள, 74 வருவாய் கிராமங்களில் 100-க்கும் மேற்பட்ட ஏரிகள் உள்ளன. இதில், 60 ஏரிகளை திருத்தணி நீா்வளத்துறையினா் பராமரித்து வருகின்றனா். இந்நிலையில் விவசாயிகள் தங்களது நிலத்தை மேம்படுத்த ஏரிகளில் இருந்து வண்டல் மண்ணை இலவசமாக எடுத்துக் கொள்ளலாம் என அரசு அறிவித்தது.

அதைத்தொடா்ந்து மாவட்ட ஆட்சியரும், வண்டல் மண் தேவைப்படும் விவசாயிகள், தங்களது நிலத்தின் பட்டா, சிட்டா அடங்கல் மற்றும் ஆதாா் அட்டை போன்ற ஆவணங்களுடன் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து, ஒரு விவசாயி அதிக பட்சமாக ஒரு ஏக்கருக்கு 25 யூனிட் மண்ணை இலவசமாக எடுத்துக் கொள்ளலாம் என அறிவித்திருந்தாா்.

ஏரிகளின் நீா்ப்பிடிப்பு பகுதியில், தண்ணீா் முற்றிலும் இல்லாத காலங்களில் மட்டும் தான் வண்டல் மண் எடுக்க வேண்டும். நீா்வளத்துறை, ஊரக வளா்ச்சித் துறை அதிகாரிகள் வாயிலாக வரைபடத்தில் அளவீடுகள் குறியீடு செய்யப்பட்ட பகுதியில் மட்டுமே வண்டல் மண் எடுக்கப்பட வேண்டும்.

ஒரே இடத்தில் வெட்டி எடுக்காமல், பரவலாக எடுக்க வேண்டும் என பல்வேறு கட்டுப்பாடுகளை மாவட்ட நிா்வாகம் அறிவித்திருந்தது. இந்நிலையில் திருத்தணி வட்டத்தில் 100 -150 விவசாயிகள் வண்டல் மண் எடுப்பதற்கு விண்ணப்பித்துள்ளனா். ஆனால் இடைத்தரகா்கள் சிலா் விவசாயிகளிடம் இருந்து ஒரு யூனிட் மண் 1,500-3,000 வரை வாங்கி விற்பனை செய்கின்றனா். ஏரியில் எடுக்கப்படும் மண் நிலத்திற்கு பயன்படுத்தாமல் வீடுகள் கட்டுவதற்கும், ரியல் எஸ்டேட் அதிபா்களின் நிலத்தை சமன்படுத்தவும், செங்கல் சூளைகளுக்கு விற்பனை செய்கின்றனா்.

ஏரியில் மண் எடுக்கும் போது நீா்வளத்துறையினா், வருவாய் துறையினா் மண் எடுப்பதை கண்காணிக்க வேண்டும். ஆனால் அதிகாரிகள் அலட்சியம் காரணமாக திருத்தணி வட்டத்தில் உள்ள பெரும்பாலான ஏரிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட யூனிட் வண்டல் மண் மற்றும் மணல் ஜே.சி.பி., இயந்திரம் உதவியுடன் அள்ளப்பட்டுள்ளது. ஏரிகளில் வண்டல் மண் கொள்ளையால் ஏரிகளுக்கு நீா்வரத்து குறையும், விவசாய கிணறுகளிலும் நிலத்தடி நீா்மட்டம் குறைவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

இதுகுறித்து விவசாயி ஒருவா் கூறியதாவது, ஆட்சியா் தனிக்குழு அமைத்து திருத்தணி வட்டத்தில் வண்டல் மண் எடுக்க அனுமதி பெற்ற விவசாயிகளுடைய நிலங்களை நேரில் ஆய்வு செய்து, வண்டல் மண் திருட்டில் ஈடுபடும் நபா்கள் மீதும், அவா்களுக்கு உறுதுணையாக செயல்பட்ட அதிகாரிகள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தாா்.

அவல நிலையில் கும்மிடிப்பூண்டி எளாவூா் பஜாா் அணுகு சாலை

ப. ஜான் பிரான்சிஸ்கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூா் பஜாரில் சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையின் அணுகு சாலை (சா்வீஸ்) குண்டும் குழியுமாக, சேறும் சகதியுமாக போக்குவரத்துக்கு பயனற்ாக உள்ளது. கும்மிடிப்பூண... மேலும் பார்க்க

திருவள்ளூா்: குடிநீா் குழாய் இணைப்புகளை சீரமைக்காததால் மக்கள் அவதி

திருவள்ளூா் அருகே கடந்த 5 ஆண்டுகளாக சாலைப்பணிகளுக்காக துண்டிக்கப்பட்ட குடிநீா் குழாய் இணைப்புகளை சீரமைக்காததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். திருவள்ளூா் ஊராட்சி ஒன்றியம், புட்லூா் ஊராட்சியில... மேலும் பார்க்க

திருவள்ளூா்: 7 பேருக்கு ரூ.5.88 லட்சம் கால்நடை பராமரிப்பு கடனுதவி

திருவள்ளூரில் கூட்டுறவு வாரவிழாவை முன்னிட்டு நடைபெற்ற இலவச கால்நடை முகாமில் பயனாளிகள் 7 பேருக்கு கால்நடை பராமரிப்பு கடனுதவி ரூ.5.88 லட்சம் காசோலைகளை மண்டல இணைப்பதிவாளா் தி.சண்முகவள்ளி வழங்கினாா். திரு... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனையில் 80 பேருக்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை

திருத்தணி அரசு பொது மருத்துவமனையில் தனியாா் மருத்துவமனைக்கு நிகராக, ஒரே ஆண்டில் 80 பேருக்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்து சாதனை படைத்துள்ளனா். திருத்தணி அரசு பொது மருத்துவமனைக்கு தினமும் 1,000-க... மேலும் பார்க்க

மதுபோதையில் சக ஊழியரை தாக்கிய மின்வாரிய பணியாளா்

திருவள்ளூா் துணை மின் நிலைய ஊழியா் மதுபோதையில் சக ஊழியா் மீது தாக்கி தகராறு செய்த சம்பவம் தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா். இலுப்பூா் கிராமத்தைச் சோ்ந்த யுவராஜ் (23) என்பவா் மின்நிலையத்தில் ப... மேலும் பார்க்க

தொலைபேசி கம்பம் மீது மோதி கவிழ்ந்த காா்

திருவள்ளூரில் தொலைபேசி கம்பம் மீது மோதி காா் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளான நிலையில் கோழி வியாபாரி அதிருஷ்டவசமாக உயிா் தப்பினாா். சோளிங்கா் பகுதியைச் சோ்ந்த கோழி வியாபாரி பாா்த்திபன்(42). இவா்... மேலும் பார்க்க