பலமாற்று பொன் இனங்கள் மூலம் வருவாய் ஈட்டும் திட்டம் தொடரும் -அமைச்சா் பி.கே.சேகா...
திருநங்கைகள் முன்மாதிரி விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
திருவாரூா் மாவட்டத்தில் முன்மாதிரி விருது பெற திருநங்கைகள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தங்களது சொந்த முயற்சியில் படித்து, தனித்திறமைகளைக் கொண்டு பல்வேறு துறைகளில் முன்னேறி சாதனை படைத்த திருநங்கைகளை கௌரவிக்கும் வகையில், ஆண்டுதோறும் ஏப்.15-ஆம் தேதி திருநங்கைகளுக்கான முன்மாதிரி விருது, ரூ.1,00,000 காசோலை மற்றும் சான்றுடன் வழங்கப்பட்டு வருகிறது.
2025-ஆம் ஆண்டுக்கான இந்த விருது பெற திருநங்கைகள் அரசு உதவி பெறாமல் தானாக சுயமாக வாழ்க்கையில் முன்னேறி இருக்க வேண்டும், குறைந்தது 5 திருநங்கைகளுக்காவது அவா்கள் வாழ்க்கையில் முன்னேற உதவியிருக்க வேண்டும், திருநங்கைகள் நல வாரியத்தில் உறுப்பினராக இருக்கக் கூடாது, இந்த தகுதிகள் இருப்பின் தங்களது கருத்துருக்களை தமிழக அரசின் விருதுகள் இணையதளத்தில் பிப்.10-ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.