செய்திகள் :

திருநள்ளாறு: `சனீஸ்வரர் கோயிலில் 2025-ல் சனிப்பெயர்ச்சி இல்லை’ - கோயில் நிர்வாகம் சொல்வதென்ன ?

post image

காரைக்கால் திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் சனீஸ்வரர் தனி சந்நிதியில் அருள்பாலித்து வருகிறார். இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் சனிப்பெயர்ச்சி இந்தக் கோயிலில் மிகவும் பிரமாண்டமாக கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டு மார்ச் 29-ம் தேதி திருநள்ளாறு சனீஸ்வரர் கோயிலில் சனிப்பெயர்ச்சி விழா கொண்டாடப்படும் என்ற தகவல் வாட்ஸ்-அப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

திருநள்ளாறு சனீஸ்வரர் கோயில்

அதனடிப்படையில் இந்தியாவைத் தாண்டி பல்வேறு நாடுகளில் இருக்கும் பக்தர்கள், திருநள்ளாறு செல்வதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் திருநள்ளாறு சனீஸ்வரர் கோயிலின் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அந்த அறிவிப்பில், `பக்தர்கள், ஜோதிடர்கள், அர்ச்சகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் சனிப்பெயர்ச்சி தொடர்பான பல்வேறு செய்திகள், கட்டுரைகள் வெளியாகி வருகின்றன.

வாக்கிய பஞ்சாங்கம் முறை

குறிப்பாக 2025 மார்ச் 29-ம் தேதி சனிப்பெயர்ச்சி விழா நடக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இது தொடர்பாக, அருள்மிகு ஸ்ரீ சனீஸ்வர பகவான் புண்ணிய திருத்தலம் வாக்கிய பஞ்சாங்கம் முறையை பின்பற்றுவதை பக்தர்களுக்கு தெரிவிக்க விரும்புகிறோம். இந்தப் பாரம்பர்ய கணிப்பு முறையின்படி 2026-ம் ஆண்டுதான் சனிப்பெயர்ச்சி நடைபெறும் என்பதை தெரிவிக்கிறோம். அதனால் 29.03.2025 அன்று வழக்கமாக நடைபெறும் பூஜைகள் மட்டுமே நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

திருநள்ளாறு சனீஸ்வரர் கோயில்

திருநள்ளாறு ஸ்ரீ சனீஸ்வர பகவான் திருத்தலத்தில் சனிப்பெயர்ச்சி தொடர்பான நிகழ்வு நடைபெற இருக்கும் தேதி மற்றும் நேரம் குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு பின்னர் அறிவிக்கப்படும். அதனால் பக்தர்கள், ஜோதிடர்கள், அர்ச்சகர்கள் மற்றும் பொதுமக்கள் திருநள்ளாறு கோயிலில் பின்பற்றப்படும் பாரம்பர்ய வாக்கிய பஞ்சாங்க மரபை கருத்தில் கொண்டு செயல்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

4 மாதங்களுக்குப் பிறகு நீச்சல்குளத்தில் உற்சாக குளியல் போட்ட தெய்வானை யானை - பக்தர்கள் மகிழ்ச்சி!

முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்கிவருகிறது திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். இக்கோயிலில் திருக்கோயில் நிர்வாகத்தால் 26 வயதான தெய்வானை என்ற பெண் யானை பராமரிக... மேலும் பார்க்க

சர்வ வஸ்ய யாகம்: கடன் ஒழியும்! காரிய ஸித்தியாகும்! நோய் ஆபத்துக்கள் விலகும்! எதிரியும் வசமாவார்!

கன்னியாகுமரி பொற்றையடியில் ஆனந்தமயமான ஸ்ரீசாய்பாபா அருள்பாலித்துக்கொண்டிருக்கிறார். இந்த ஆண்டு 13-வது வருஷாபிஷேக நாளில் (10-4-2025) சர்வ வஸ்ய யாகம், அபிஷேக ஆராதனைகள் நடைபெற உள்ளன. வாசகர்கள் இங்கு சங்க... மேலும் பார்க்க

சேலம்: விமர்சையாக நடைபெற்ற எல்லைப்பிடாரி அம்மன் கோயில் தீமிதி விழா... Photo Album!

சேலம் எல்லைப்பிடாரி அம்மன் தீமிதி விழாசேலம் எல்லைப்பிடாரி அம்மன் தீமிதி விழாசேலம் எல்லைப்பிடாரி அம்மன் தீமிதி விழாசேலம் எல்லைப்பிடாரி அம்மன் தீமிதி விழாசேலம் எல்லைப்பிடாரி அம்மன் தீமிதி விழாசேலம் எல்ல... மேலும் பார்க்க

வள்ளி - முருகன் திருக்கல்யாணவிழா... வேளிமலையில் பாரம்பர்ய குறவர் படுகளம் நிகழ்ச்சி | Album

கன்னியாகுமரி மாவட்டம் வேளிமலை குமாரசுவாமி கோயிலில் வள்ளி - முருகன் திருக்கல்யாணவிழா நடந்தது. முன்னதாக வேடர் வடிவில் சென்று வள்ளி பிராட்டியை திருமணம் செய்ய முயலும் முருகப்பெருமானை குறவர்கள் தடுத்து நிற... மேலும் பார்க்க

Holi: "வண்ணங்களால் வசந்தத்தை வரவேற்கிறோம்!" - வெலிங்டன் ராணுவ குடியிருப்பில் களைகட்டிய ஹோலி பண்டிகை

வட மாநிலங்களில் பெரும்பாலான மக்களால் கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்றாக இருக்கிறது ஹோலி பண்டிகை. கடந்த இரண்டு நாள்களாக நாடு முழுவதும் ஹோலி பண்டிகை களைகட்டியிருக்கிறது. வடமாநில மக்கள் அதிகம் வாழும் நீல... மேலும் பார்க்க