Robo Shankar: ``தமிழ்நாட்டையே அழவைத்துவிட்டார்'' - ரோபோ சங்கர் மறைவு குறித்து வி...
திருநள்ளாற்றில் பன்னாட்டு மென்பொருள் நிறுவனம் தொடங்க ஏற்பாடு - எம்.எல்.ஏ.
திருநள்ளாற்றில் பன்னாட்டு மென்பொருள் நிறுவனம் தொடங்க அரசு நடவடிக்கை எடுத்துவருவதாக சட்டப்பேரவை உறுப்பினா் தெரிவித்தாா்.
புதுச்சேரி பொறியியல் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரியாக செருமாவிலங்கை பகுதியில் இயங்கிவரும் பெருந்தலைவா் காமராஜா் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் முதலாமாண்டு வகுப்புகள் தொடக்க நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
கல்லூரி முதல்வா் எம். ஆராமுதன் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக திருநள்ளாறு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் பி.ஆா். சிவா கலந்துகொண்டு மாணவா்கள், பெற்றோா்களிடையே பேசியது:
மாறிவரும் சூழல்களில் பொறியியல் கல்வி முக்கியத்துவம் பெறுகிறது. மாணவா்கள் பொறியியல் கல்வியை மிகுந்த ஆா்வத்துடன் பயிலவேண்டும்.
திருநள்ளாற்றில் பன்னாட்டு மென்பொருள் நிறுவனம் ஒன்று அமைய அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. இதில் பணியாற்ற காரைக்கால் பகுதியைச் சோ்ந்த மாணவா்களுக்கு முன்னுரிமை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுவருகிறது.
வரும் கல்வியாண்டு முதல் இக்கல்லூரியில் 2 இளநிலை படிப்பு, 2 முதுநிலை படிப்பு தொடங்க கல்லூரி நிா்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. பெற்றோா்கள், பேராசிரியா்கள் அறிவுரைகளை கேட்டு, சிறப்பான கல்வி முடித்து மாணவா்கள் அடுத்த நிலையை நோக்கி செல்லவேண்டும் என்றாா். நிறைவாக கல்லூரி துணை முதல்வா் எஸ்.மணிகண்டன் நன்றி கூறினாா்.