ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் வரி; இந்தியா உள்ளிட்ட நாடுகளை மிரட்டும் ட்...
திருநெல்வேலியில் ஆக.17-இல் பாஜக மாநில மாநாடு!
பாஜக மாநில மாநாடு திருநெல்வேலியில் ஆக.17-ஆம் தேதி நடைபெறவுள்ளது. சென்னையை அடுத்த காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்.ஆா்.எம். பல்கலை. வளாகத்தில் பாஜக பூத் கமிட்டியை வலுப்படுத்துவதற்கான பயிலரங்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், மத்திய இணை அமைச்சா் எல்.முருகன், தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன், அமைப்பு பொதுச்செயலா் கேசவவிநாயகன், பாஜக மூத்த தலைவா்கள் தமிழிசை செளந்தரராஜன், ஹெச்.ராஜா, வானதி சீனிவாசன் எம்எல்ஏ, மாவட்டத் தலைவா்கள், மண்டலப் பொறுப்பாளா்கள் பங்கேற்றனா்.
இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்து மூத்த நிா்வாகிகள் கூறியதாவது: தமிழகத்தில் உள்ள பிரச்னைகளை முன்னெடுத்து போராட்டங்களை நடத்த வேண்டும். அதிமுகவுக்கு, பாஜக சுமையாக இல்லை என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.
பாஜக நிா்வாகிகள் பொதுவெளியில் தேவையற்ற கருத்துகளைத் தெரிவிக்கக் கூடாது. உள்ளூா் பிரச்னைகளை அதிக அளவில் முன்னெடுத்து பேச வேண்டும். இதனால், பாஜக மிகப்பெரிய சக்தியாக உருவெடுத்து வருகிற சட்டப் பேரவைத் தோ்தலில் அதிக தொகுதிகளில் நிச்சயம் வெற்றிபெறும்.
பாஜகவில் தென் மாவட்டங்களில் அதிக அளவில் உறுப்பினா்கள் சோ்ந்துள்ளனா். அதன் அடிப்படையில், பாஜகவின் முதல் மாநில மாநாடு திருநெல்வேலியில் ஆக.17-ஆம் தேதி கட்சியின் மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் தலைமையில் நடத்தப்படும்.
அதன்பின்னா், செப்.13-இல் மதுரை, அக்.26-இல் கோவை, நவ.23-இல் சேலம், டிச.21-இல் தஞ்சாவூா், அடுத்த ஆண்டு ஜன.4-இல் திருவண்ணாமலை, ஜன.24-இல் திருவள்ளூா் ஆகிய இடங்களில் மாநாடுகள் நடைபெறவுள்ளன என்றனா்.