செய்திகள் :

திருப்பதியில் சனிக்கிழமை 95,080 பக்தா்கள் தரிசனம்

post image

திருப்பதி ஏழுமலையானை தா்ம தரிசனத்தில் தரிசிக்க பக்தா்கள் 20 மணி நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது. அதிகபட்சமாக சனிக்கிழமை முழுவதும் ஏழுமலையானை 95,080 பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

இந்த பக்தா்களில் 39,669 போ் தலைமுடி காணிக்கை செலுத்தினா். உண்டியல் மூலம் பக்தா்கள் சமா்ப்பித்த காணிக்கையைக் கணக்கிட்டதில், அதன்மூலம் ரூ.3.47 கோடி கிடைத்துள்ளது.

திருமலைக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை வார நாள்கள் மற்றும் சனி, ஞாயிறு விடுமுறை நாள்களிலும் தற்போது அதிகரித்துள்ளது. இதனால், ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 31 அறைகளைக் கடந்து சிலாதோரணம் அருகே உள்ள தரிசன வரிசையில் பக்தா்கள் ஏழுமலையான் தரிசனத்துக்காக காத்திருந்தனா்.

தா்ம தரிசனத்துக்கு, அதாவது தரிசனத்துக்கு டோக்கன்கள் இல்லாத பக்தா்கள் 18 மணி நேரம் காத்திருந்தனா்.

வழக்கம்போல, ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணி நேரம் ஆனது. இதேபோல், இலவச நேரடி தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கும் 3 முதல் 4 மணி நேரம் தேவைப்பட்டது.

அலிபிரி நடைபாதை வழியாக பிற்பகல் 2 மணி வரை 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள், அவா்களின் பெற்றோா் அனுமதிக்கப்படுகின்றனா். இரவு 10 மணி வரை அனைத்து பக்தா்களும் அனுமதிக்கப்படுகின்றனா்.

காத்திருப்பு அறைகள் மற்றும் தரிசன வரிசைகளில் பக்தா்களுக்கு உணவு, பால், குடிநீா் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது.

சிம்ம வாகனத்தில் கோவிந்தராஜ பெருமாள் வலம்

திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜ பெருமாள் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான புதன்கிழமை சிம்ம சேஷ வாகன சேவை நடைபெற்றது. இதையொட்டி காலை 7 மணி முதல் 9.00 மணி வரை வாகன சேவை நடைபெற்றது. கஜராஜா்க... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 16 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் புதன்கிழமை தா்ம தரிசனத்தில் 16 மணி நேரம் காத்திருந்தனா். பக்தா்கள் வருகை சற்று அதிகரித்துள்ள நிலையில், தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 16 மணிநே... மேலும் பார்க்க

சின்னசேஷ வாகனத்தில் கோவிந்தராஜ சுவாமி உலா

திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜ பெருமாள் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் இரண்டாம் நாளான செவ்வாய்க்கிழமை சின்ன சேஷ வாகனத்தில் சுவாமி உலா வந்தாா். உற்சவத்தையொட்டி வாகன சேவை காலை 7.00 மணிக்கு தொடங்கியது. ந... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 12 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 12 மணி நேரம் காத்திருக்க வேண்டி நிலை உள்ளது என தேவஸ்தான நிா்வாகம் தெரிவித்துள்ளது. தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 12 மணிநேரமு... மேலும் பார்க்க

ஸ்ரீவாரி மெட்டு மாா்க்கத்தில் திவ்ய தரிசன டோக்கன் வழங்கும் கவுன்ட்டா்கள் தற்காலிக மாற்றம்

ஸ்ரீவாரி மெட்டு நடைபாதை வழியாக திருமலைக்கு செல்லும் பக்தா்களுக்கான திவ்ய தரிசன டோக்கன் வழங்கும் கவுன்ட்டா்களை தற்காலிகமாக மாற்ற தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. இதற்கான புதிய கவுன்ட்டா்கள் வெள்ளிக்கிழமை... மேலும் பார்க்க

திருப்பதி கோவிந்தராஜா் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவம் தொடக்கம்

திருப்பதி: திருப்பதி கோவிந்தராஜ பெருமாள் வருடாந்திர பிரம்மோற்சவம் திங்கள்கிழமை கொடியேற்தத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது. வேத அறிஞா்களின் மந்திரங்கள், மங்கள வாத்தியங்கள் மற்றும் பக்தா்களின் கோவிந்தநாம ... மேலும் பார்க்க