காஸா: இடம்பெயர்ந்த லட்சக்கணக்கானோர் சொந்த ஊர்களுக்கு படையெடுப்பு!
திருப்பதி கோவிலுக்கு ரூ. 6 கோடி நன்கொடை வழங்கிய சென்னை பக்தர்!
சென்னையைச் சேர்ந்த பக்தர் ஒருவர் திருப்பதி தேவஸ்தானத்துக்கு ரூ. 6 கோடி நன்கொடை வழங்கியுள்ளார்.
சென்னையைச் சேர்ந்த பெருமாள் பக்தரான வர்தமன் ஜெயின் திருப்பதி தேவஸ்தானத்துக்கு நன்கொடையாக ரூ. 6 கோடி வழங்கியுள்ளார்.
ஸ்ரீ வெங்கடேஸ்வரா பக்தி சேனலுக்கு ரூ. 5 கோடியும், ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோசம்ரக்சனா அறக்கட்டளைக்கு ரூ. 1 கோடியும் அவர் வழங்கியதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க | இந்திய வரலாற்றின் முதல் வரைவு காலனித்துவவாதிகளால் திரிக்கப்பட்டது: ஜக்தீப் தன்கர்
திருமலை கோவிலில் உள்ள ரங்கநாயகுலா மண்டபத்தில் இந்தத் தொகைக்கான காசோலைகளை (டிடி) அவர் வழங்கியதாக தேவஸ்தான செய்தி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் சொந்த சேனலான ஸ்ரீ வெங்கடேஸ்வரா பக்தி சேனல் ஆன்மீகம் சார்ந்த நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து ஒளிபரப்பி வருகின்றது. ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோசம்ரக்சனா அறக்கட்டளை பசு பாதுகாப்பு மற்றும் ஆன்மீக முக்கியத்துவத்தை மக்களிடையே வலியுறுத்துவதில் கவனம் செலுத்துகிறது.
வர்தமன் ஜெயின் தனது குடும்பத்தினருடன் திருமலை திருப்பதி தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரி வெங்கையா சௌதரியிடம் காசோலைகளை வழங்கினார்.