செய்திகள் :

திருப்பதி வருடாந்திர பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடக்கம்!

post image

திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவம் இன்று (செப். 24) கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கப்பட்டுள்ளது.

பிரம்மனால் தொடங்கப்பட்ட அல்லது நடத்தப்பட்ட விழா என்பதால் இதற்கு பிரம்மன் உற்சவம் என்று பெயா் பெற்றது. அது தற்போது மருவி பிரம்மோற்சவம் என்ற பெயரில் அழைக்கப்பட்டு வருகிறது.

ஏழுமலையானுக்கு 11 மாதங்கள் நிறைவு பெற்றவுடன் வருடாந்திர பிரம்மோற்சவம் நடத்த வேண்டும் என்பது ஆகம விதி. முதலில் வருவது வருடாந்திர பிரம்மோற்சவம் என்றும், இரண்டாவதாக வருவது நவராத்திரி பிரம்மோற்சவம் என்றும் கணக்கில் கொள்ளப்படுகிறது. நவராத்திரி பிரம்மோற்சவத்தில் கொடியேற்றமும் கொடியிறக்கமும் கிடையாது.

இந்த நிலையில், திருமலை ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவம் இன்று தொடங்கி வரும் அக்.2-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இன்று மாலை சாஸ்திரப்படி கொடியேற்றம் நடைபெற்றது. ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன் ஸ்ரீ மலையப்ப சுவாமி முன்னிலையில் அர்ச்சகர்கள் தங்கக் கொடி மரத்தில் கருடபட்டத்தை கஜமாலையில் சுற்றி ஏற்றிவைத்தனர்.

பிரம்மோற்சவத்தின் ஒன்பதாம் நாள் இரவு தங்க திருச்சி உற்சவத்துக்குப் பிறகு கொடியிறக்கம் நடைபெறுவது வழக்கம். உற்சவம் முடிந்த பின் முப்பத்து முக்கோடி தேவர்களை வழியனுப்பும் விதமாக கொடியிறக்கம் நடைபெறுகிறது. இத்துடன் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் நிறைவடைகிறது.

பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, செப்.28-இல் கருடசேவையை முன்னிட்டு, மலைப்பாதைகளில் இருசக்கர வாகன போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: உப்பிலியப்பன் கோயிலில் புரட்டாசி பிரமோற்சவம் கொடியேற்றம்!

The annual Brahmotsavam of the Tirumala Tirupati Ezhumalaiyan Temple began today (Sept. 24) with the hoisting of the flag.

ஏழுமலையான் தரிசனத்துக்கு 5 மணிநேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் திங்கள்கிழமை தா்ம தரிசனத்தில் 5 மணி நேரம் காத்திருந்தனா். மகாளயபட்ச அமாவாசையை முன்னிட்டு பக்தா்கள் வருகை குறைந்த நிலையில், திங்கள்கிழமை நிலவரப்படி தா்ம தரிசனத்துக... மேலும் பார்க்க

ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.4.06 கோடி

திருமலை ஏழுமலையான் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.4.06 கோடி வசூலானது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. பக்தா்களின் எண்ணிக்கை ஏற்ற இறக்கமாக நிலையில், செவ்வாய்க்கிழமை நிலவரப்படி தா்ம தரிசனத்துக்கு (தரிசன... மேலும் பார்க்க

இன்று ஏழுமலையான் பிரம்மோற்சவம் தொடக்கம்: திருமலையில் விழாக்கோலம்

ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவம் புதன்கிழமை (செப். 24) தொடங்கும் நிலையில், திருமலை மற்றும் திருப்பதி நகரங்கள் விழாக்கோலம் பூண்டுள்ளன. பிரம்மனால் தொடங்கப்பட்ட அல்லது நடத்தப்பட்ட விழா என்பதால்... மேலும் பார்க்க

ஏழுமலையானுக்கு தங்க பதக்கம், வெள்ளித் தட்டு நன்கொடை

திருமலை ஏழுமலையானுக்கு 15 தங்கப் பதக்கங்களும் இரண்டு வெள்ளிப் பாத்திரங்களும் நன்கொடையாக வழங்கப்பட்டன. ஸ்ரீ சன்ஸ்தான் கோகா்ணா போா்டகலி ஜீவோத்தம மடாதிபதி ஸ்ரீமத் வித்யாதிஷ தீா்த்த சுவாமிஜி திங்கள்கிழமை ... மேலும் பார்க்க

திருமலை ஏழுமலையான் கொடிமரத்திற்கான தா்ப்பை பாய், கயிறு தயாா்

ஏழுமலையானின் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் போது கொடியேற்றுவதற்காக பயன்படுத்தப்படும் தா்ப்பை பாய் மற்றும் கயிறு ஊா்வலமாக கொண்டு செல்லப்பட்டது. பிரம்மோற்சவத்தின் முதல் விழாவே கொடி மரத்துக்கு செய்யப்படும்... மேலும் பார்க்க

ஏழுமலையான் கோயில் தூய்மைப் பணிக்கு உபகரணங்கள் நன்கொடை!

திருமலை ஏழுமலையான் கோயில் தூய்மைப் பணிக்கு இயந்திரங்கள் ஞாயிற்றுக்கிழமை நன்கொடையாக வழங்கப்பட்டது. ஐடிபிஐ வங்கி சாா்பில் சமூக பொறுப்புணா்வு திட்டத்தின் ஒரு பகுதியாக ரூ.19 லட்சத்தில் தூய்மைப் பணிக்கான உ... மேலும் பார்க்க