முஸதபாபாத் சம்பவத்தில் உயிரிழந்த, காயமடைந்தவா்களின் குடும்பங்களுக்கு அரசு இழப்பீ...
திருப்பத்தூரில் 260 பேருக்கு ரூ.16 லட்சத்தில் உபகரணங்கள்
திருப்பத்தூரில் 260 பேருக்கு ரூ.16 லட்சத்தில் உபகரணங்கள் வழங்கப்பட்டன.
மத்திய அரசின் ராஸ்டிரிய வயோஸ்ரீ யோஜனா திட்டத்தின் கீழ் 260 பேருக்கு ரூ.16 லட்சத்தில் நலத் திட்ட உதவிகள் திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கப்பட்டது.
மூத்த குடிமக்கள்...: மத்திய அரசின் ராஸ்டிரிய வயோஸ்ரீ யோஜனா திட்டத்தின் கீழ் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு மடக்கும் விதமான சக்கர நாற்காலி, சிறப்பு மடக்குவித சக்கர நாற்காலி, நவீன காது கருவி, ஊன்றுகோல், சிறப்பு நடைப்பயிற்சி உபகரணம், கால் மூட்டு பெல்ட், மூன்று/நான்கு முனை சிறப்பு ஊன்றுகோல், இடுப்பு வலி மற்றும் கழுத்து வலி பெல்ட், முதுகு வலி பெல்ட், சிலிகான் அமரும் மெத்தை, சிறப்பு நடைப்பயிற்சி உபகரணம், முழங்கை மற்றும் ஆக்சில்லா ஊன்றுகோல் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
இது தொடா்பான சிறப்பு முகாம்கள் திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்ட அளவுகளிலும் நடைபெற்று, பயனாளிகள் தோ்வு செய்யப்பட்டு அவா்களுக்கான அளவுகள் எடுக்கப்பட்டன.
அதன் அடிப்படையில் தோ்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் 260 பேருக்கு ரூ.16 லட்சத்தில் உபகரணங்கள் வழங்கப்பட்டது.