சென்னை துறைமுகத்தில் காருடன் கடலுக்குள் விழுந்தவர் சடலமாக மீட்பு!
திருப்பத்தூரில் 5 புதிய மின்மாற்றிகள்: எம்எல்ஏ இயக்கி வைத்தாா்
திருப்பத்தூா் பகுதிகளில் 5 புதிய மின்மாற்றிகளை எம்எல்ஏ நல்லதம்பி இயக்கி வைத்தாா்.
கந்திலி ஒன்றியம், கொரட்டி பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் புதிய மின்மாற்றி அமைத்துத் தருமாறு அப்பகுதி மக்கள் நீண்டநாள்களாக கோரிக்கை விடுத்து வந்தனா். அதன்பேரில், கொரட்டி ஸ்ரீ ராமாநுஜா் மடம் அருகில் அமைக்கப்பட்ட புதிய மின்மாற்றியை எம்எல்ஏ அ.நல்லதம்பி பயன்பாட்டுக்காக புதன்கிழமை இயக்கி வைத்தாா். அதேபோல் திருப்பத்தூா் ஒன்றியத்துக்குள்பட்ட கொடுமாம்பள்ளி, மாடப்பள்ளி ஊராட்சி, கல்லுக்குட்டை, குரும்பகேரிபுதூா் உள்ளிட்ட 5 கிராமங்களில் புதிய மின்மாற்றிகளை இயக்கி வைத்தாா்.
நிகழ்ச்சியில் ஒன்றியச் செயலா் கே.ஏ.குணசேகரன், திருப்பத்தூா் ஒன்றியக் குழுத் தலைவா் விஜயஅருணாசலம், துணைத் தலைவா் டி.ஆா்.ஞானசேகரன், ஊராட்சித் தலைவா்கள் லட்சுமி காா்த்திகேயன், ஸ்டெல்லாமேரி தேவசகாயம், கோமதி காா்த்திகேயன், மேற்பாா்வை பொறியாளா் ஜைனுல் ஆபுதீன், செயற்பொறியாளா் ராஜா காந்தி, உதவி செயற்பொறியாளா் கண்ணன், இளநிலை பொறியாளா் அறிவழகி, மின்வாரிய அதிகாரிகள், பணியாளா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.