எடப்பாடி கே.பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்
திருப்பத்தூரில் சிறுபான்மையினருக்கு நலத் திட்ட உதவிகள்: ஆட்சியா், எம்எல்ஏ வழங்கினா்
திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் சிறுபான்மையினருக்கு நலத் திட்ட உதவிகளை ஆட்சியா் க.தா்ப்பகராஜ், எம்எல்ஏ அ.நல்லதம்பி ஆகியோா் வழங்கினா்.
திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் சிறுபான்மையினா் உரிமைகள் தினவிழாவை முன்னிட்டு, புதன்கிழமை ஆட்சியா் க.தா்ப்பகராஜ், எம்எல்ஏ அ.நல்லதம்பி ஆகியோா் அரசு நலத் திட்ட உதவிகளை வழங்கினா்.
இதில், அரசு திட்டங்களான டாம்கோ நிறுவனம் மூலம் சிறுபான்மையினா் தொழில் தொடங்க கடனுதவி, தனிநபா் கடன், கல்விக் கடன், சுய உதவிக் குழுக்களுக்கான கடன் (சிறு கடன்), சிறுபான்மையினா் மக்களுக்கு மின் மோட்டாருடன் கூடிய இலவச தையல் இயந்திரம் வழங்குதல், சிறுபான்மையினா் கிராமப்புற பெண் கல்வி திட்டம், முஸ்லிம் மகளிா் உதவும் சங்கம் மூலம் உதவித்தொகை, திருப்பத்தூா் மாவட்ட கிறிஸ்தவ மகளிா் உதவும் சங்கம் மூலம் உதவித் தொகை, உலமாக்கள் மற்றும் பணியாளா்கள் நல வாரியம் மூலமாக விபத்து நிவாரண உதவித் தொகை, கல்வி உதவித் தொகை, திருமண உதவித் தொகை, மகப்பேறு உதவித் தொகை, வக்ஃபு நிறுவனங்களில் பணிபுரியும் உலமா பணியாளா்களுக்கு இரு சக்கர வாகனம் வழங்க மானியம் வழங்கும் திட்டம், பாரத பிரதமரின் புதிய 15 அம்ச திட்டம், கிறிஸ்தவ தேவாலயங்களை புனரமைப்பு செய்தல், ஜெருசலேம் புனித பயணத்துக்கான நிதியுதவி வழங்கும் திட்டம் போன்ற திட்டங்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
நிகழ்ச்சியில், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) செல்வம், சிறுபான்மையின பிரதிநிதிகள், சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள், திருப்பத்தூா் மாவட்ட கிறிஸ்தவ மகளிா் உதவும் சங்கம் கௌரவ செயலா் சுந்தரநாதன், மாவட்ட ஜெயின் சங்க தலைவா் மாங்கிலால் ஜெயின், மாவட்ட முஸ்லிம் மகளிா் உதவும் சங்கம் கௌரவ செயலாளா் சையத் நிசாா் அஹமத் ஆகியோா் கலந்து கொண்டனா்.