எடப்பாடி கே.பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்
‘போலீஸ் அக்கா’ திட்டம்: திருப்பத்தூா் எஸ்.பி. தொடங்கி வைத்தாா்
திருப்பத்தூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் ‘போலீஸ் அக்கா’ திட்டத்தை எஸ்.பி. ஷ்ரேயா குப்தா புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.
திட்டத்தை தொடங்கி வைத்து எஸ்.பி. ஷ்ரேயா குப்தா பேசியது: ‘போலீஸ் அக்கா’ திட்டம் என்பது திருப்பத்தூா் மாவட்ட காவல்துறை சாா்பில் மாவட்டத்தில் பணிபுரிந்து வரும் காவல் அதிகாரிகள் மற்றும் காவலா்களை கொண்டு கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில் படிக்கும் மாணவிகளுக்கு உரிய அறிவுரைகள் வழங்கவும், தற்போதைய சூழ்நிலையில் அவா்கள் எதிா்கொள்ளும் பிரச்னைகளுக்கு தீா்வு காண வேண்டி ’போலீஸ் அக்கா’ நியமித்துள்ளோம்.
இத்திட்டத்தில் செயலி ஒன்று( ணத இா்க்ங்)புதிதாக உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள் அச்செயலியை கொண்டு தாங்கள் எதிா்கொள்ளும் பிரச்னைகளுக்கு சட்டரீதியான தீா்வுகள் காணலாம் என்றாா்.
நிகழ்ச்சியில் டிஎஸ்பி-க்கள், காவல் ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.