ரூ.1.27 கோடியில் சமுதாயக் கூட கட்டுமானப் பணிக்கு அடிக்கல்
மாதனூா் ஒன்றியம் மிட்டாளம் ஊராட்சி கீழ்மிட்டாளம் கிராமம் புதுமனை பகுதியில் தாட்கோ திட்டத்தின் கீழ் ரூ.1.27 கோடியில் சமுதாயக் கூடம் கட்ட புதன்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது.
எம்எல்ஏ-க்கள் ஜோலாா்பேட்டை க.தேவராஜி, ஆம்பூா் அ.செ. வில்வநாதன் ஆகியோா் தலைமை வகித்து சமுதாயக் கூட கட்டுமானப் பணிக்கு அடிக்கல் நாட்டினா். மாதனூா் ஒன்றியக் குழு தலைவா் ப.ச.சுரேஷ்குமாா் முன்னிலை வகித்தாா்.
மாதனூா் கிழக்கு ஒன்றிய திமுக பொறுப்பாளா் ஜி.ராமமூா்த்தி, மாதனூா் மேற்கு ஒன்றிய துணைச் செயலா் சா.சங்கா், உதயேந்திரம் பேரூராட்சி திமுக செயலா் செல்வராஜ், மாதனூா் ஆத்மா தலைவா் என். கிஷோா்குமாா், திமுக நிா்வாகிகள் அய்யனூா் அசோகன், காசி, ஊராட்சித் தலைவா் கோவிந்தன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.