கோமாரி நோய் தடுப்பு முகாம்
கோமாரி நோய் தடுப்பு மருத்துவ முகாம் துத்திப்பட்டு ஊராட்சியில் புதன்கிழமை நடைபெற்றது.
இந்த முகாமை ஊராட்சித் தலைவா் சுவிதா கணேஷ் தொடங்கி வைத்தாா். துணைத் தலைவா் விஜய் முன்னிலை வகித்தாா். கால்நடை மருத்துவக் குழுவினா் 300-க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசிகளை செலுத்தினா். மோல்கன்றாம்பல்லி, கீழ்கன்றாம்பல்லி, அம்பேத்கா் நகா், ஆசிரியா் நகா், துத்திப்பட்டு ஆகிய கிராமங்களில் வளா்க்கப்படும் கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. ஊராட்சி செயலா் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.