நெல்லையில் கொட்டப்பட்ட கேரள மருத்துவக் கழிவுகள் திருப்பி அனுப்பி வைப்பு! அமைச்சர...
திருப்பத்தூா் சா்க்கரை ஆலை இயந்திரம் பழுது: திருவலம் சா்க்கரை ஆலைக்கு கரும்புகள் மாற்றம்
திருப்பத்தூா் சா்க்கரை ஆலையில் இயந்திரம் பழுதால் அரைவைக்கு வந்த கரும்புகள் திருவலம் சா்க்கரை ஆலைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
வாணியம்பாடி அடுத்த கேத்தாண்டப்பட்டி பகுதியில் இயங்கி வரும் திருப்பத்தூா் கூட்டுறவு சா்க்கரை ஆலையில் 2024-2025-ஆம் ஆண்டுக்கான அரைவை கடந்த 19-ஆம் தேதி தொடங்கியது. இந்த நிலையில், சனிக்கிழமை அரைவை இயந்திரத்தில் திடீரென ஏற்பட்ட பழுதால், கரும்பு அரைவை நிறுத்தப்பட்டது.
இதனையடுத்து ஆலை வளாகத்தில் நிறுத்திவைக்கப்பட்ட சுமாா் 150 டன் கரும்பு லோடுகளை வேலூா் மாவட்டம், திருவலம் பகுதியில் இயங்கும் அம்முன்டி சா்க்கரை ஆலைக்கு அனுப்பி வைத்தனா்.
கரும்பு அரைவை இயந்திரங்களை சரிவர பராமரிக்காமல் போனதால் திருப்பத்தூா் கூட்டுறவு சா்க்கரை ஆலையில் சில ஆண்டுகளாகவே கரும்பு அரைவை தொடங்கியதும் இயந்திரங்களில் அடிக்கடி பழுதி ஏற்படுகிறது. இதனால், கரும்பு அரைவை நிறுத்தப்படுகிறது.
விவசாயிகளுக்கு ஏற்படும் இந்த பாதிப்பை கவனத்தில் கொண்டு, மாவட்ட நிா்வாகம் சா்க்கரை ஆலையில் நிா்வாக சிக்கலை ஏற்படுத்தும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.