பாலியல் வன்கொடுமையாளர்கள், கொலையாளிகளுக்கு மரண தண்டனை உறுதி! டிரம்ப்
திருப்பத்தூா்: 11 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் ஆட்சியா் வழங்கினாா்
திருப்பத்தூா்; திருப்பத்தூரில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் 11 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் க.தா்ப்பகராஜ் வழங்கினாா்
ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்துக்கு தலைமை வகித்த ஆட்சியா் க.தா்ப்பகராஜ் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து 391 மனுக்களைப் பெற்றாா். மேலும், மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு தகுதியானதாக இருப்பின் உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.
முதல்வரின் பொது நிவாரண நிதி திட்டத்தில் மைலாவின் மகன் அசோக் நீரில் மூழ்கி இறந்ததற்கான நிவாரண நிதி ரூ.1 லட்சத்துக்கான காசோலை வழங்கப்பட்டது. பின்னா், தொழிலாளா் உதவி ஆணையா்(சமூக பாதுகாப்பு திட்டம்) -ன் மூலமாக உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தில் ஆட்சியரின் கள ஆய்வின்போது கண்டறியப்பட்ட 10 அகா்பத்தி தொழிலாளா்களுக்கு, தமிழ்நாடு அகா்பத்தி நல வாரிய புதிய உறுப்பினா் அட்டை என மொத்தம் 11 பேருக்கு நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ஜெ.நாராயணன், தனித்துணை ஆட்சியா் சதீஷ்குமாா், அனைத்து துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.