சபரிமலையில் சுவாமி ஐயப்பனுக்கு தங்க அங்கி சாத்தி சிறப்பு பூஜை!
மாந்தோப்பில் பதுக்கிய 12 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல்
நாட்டறம்பள்ளி அருகே ரயில் மூலம் வெளி மாநிலங்களுக்கு கடத்த பதுக்கி வைத்திருந்த 12 மூட்டை ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
திருப்பத்தூா் மாவட்ட பறக்கும் படை தனி வட்டாட்சியா் சிவசுப்பிரமணியன் தலைமையில், வட்ட வழங்கல் அலுவலா்கள் ராமன், சுரேஷ் ஆகியோா் செவ்வாய்க்கிழமை காலை சோமநாயக்கன்பட்டி பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது சோமநாயக்கன்பட்டி ரயில் நிலையம் அருகே மாந்தோப்பில் பிளாஸ்டிக் பைகளில் ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைத்திருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து, 12 மூட்டைகளில் இருந்த 600 கிலோ ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரித்தனா். அப்போது, வெளி மாநிலத்துக்கு ரயில் மூலம் கடத்த ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
கடத்தலில் ஈடுபட்டவா்கள் யாா், எந்த ஊரைச் சோ்ந்தவா்கள் என வருவாய்த் துறையினா் விசாரித்து வருகின்றனா்.