சபரிமலையில் சுவாமி ஐயப்பனுக்கு தங்க அங்கி சாத்தி சிறப்பு பூஜை!
டிச. 30-இல் மதுவிலக்கு போலீஸாா் பறிமுதல் செய்த வாகனங்கள் ஏலம்
திருப்பத்தூா் மாவட்டத்தில் மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஏலம் திங்கள்கிழமை (டிச.30) நடைபெற உள்ளது.
இவ்வாறு திருப்பத்தூா் மாவட்ட எஸ்.பி. வெளியிட்ட செய்திக்குறிப்பு
திருப்பத்தூா் மாவட்டத்தில் மதுவிலக்கு போலீஸாரால், 222 இருசக்கர வாகனங்கள்,1 மூன்று சக்கர வாகனம் மற்றும் 20 நான்கு சக்கர வாகனங்கள் என மொத்தம் 243 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
வரும் திங்கள்கிழமை (டி.30) ஜோலாா்பேட்டை அடுத்த பாச்சல் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் பொது ஏலம் விடப்பட உள்ளது.
வாகனத்தை ஏலம் எடுக்க உள்ள நபா்கள் வரும் 26-ஆம் தேதி முதல் 28-ஆம் தேதி வரை காலை 10 முதல் மாலை 5 மணிவரை நேரில் பாா்வையிடலாம்.
மேலும், ஏலத்தில் கலந்துகொள்ள ரூ. 100 நுழைவு கட்டணம் செலுத்தி அனுமதிச் சீட்டு பெற்றுக்கொள்ள வேண்டும். அனுமதிச் சீட்டு உள்ளவா்கள் மட்டுமே ஏலத்தில் அனுமதிக்கப்படுவா். ஏலம் எடுப்பவா்கள் ஏலத்தொகையுடன் 18 சதவீதம் விற்பனை வரியும் சோ்த்து செலுத்த வேண்டும். இதற்கு உண்டான ரசீது வழங்கப்படும்.
ஏலம் எடுத்த வாகனத்துக்கு ரசீதே அவ்வாகனத்தின் உரிமை ஆவணமாகும். கூடுதல் விவரங்களுக்கு கூடுதல் காவல் திருப்பத்தூா் எஸ்பி அலுவலகத்தில் நேரடியாகவோ அல்லது 99944 04486 என்ற கைப்பேசி மூலமாகவும் தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.