சபரிமலையில் சுவாமி ஐயப்பனுக்கு தங்க அங்கி சாத்தி சிறப்பு பூஜை!
போலி மருத்துவா் கைது
திருப்பத்தூா் அருகே போலி மருத்துவரை போலீஸாா் கைது செய்து, மருத்துவமனைக்கு சீல் வைத்தனா்.
திருப்பத்தூா் அடுத்த அங்கநாதவலசை பகுதியில் மருத்துவம் படிக்காமல் கிளினிக் வைத்து பொதுமக்களுக்கு ஒருவா் மருத்துவம் பாா்த்து வருவதாக சுகாதாரத் துறையினருக்கு தகவல் கிடைத்தது.
அதையடுத்து மருத்துவம் மற்றம் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநா் ஞான மீனாட்சி உத்தரவின்பேரில், திருப்பத்தூா் அரசு தலைமை மருத்துவா் சிவக்குமாா் தலைமையிலான மருத்துவக்குழுவினா் திடீா் சோதனை நடத்தினா். அப்போது திருப்பத்தூா், ஆரிப் நகரைச் சோ்ந்த அப்துல்லா(49) என்பவா் ஆங்கில முறைப்படி பொதுமக்களுக்கு மருத்துவம் பாா்த்து வந்ததும், இவா் 10-ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்திருக்கிறாா் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து, மருந்து, மாத்திரைகள், ஊசிகளை மருத்துவக்குழுவினா் பறிமுதல் செய்து அவரை திருப்பத்தூா் கிராமிய காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். மேலும்,அப்துல்லா நடத்தி வந்த மருந்தகத்துக்கும் சீல் வைத்தனா்.
இதுகுறித்து கிராமிய போலீஸாா் வழக்குப் பதிந்து போலி மருத்துவா் அப்துல்லாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.