செய்திகள் :

மைய நூலகத்தில் புகைப்படக் கண்காட்சி: திருப்பத்தூா் ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

post image

திருவள்ளுவா் சிலை வெள்ளி விழாவை முன்னிட்டு திருப்பத்தூா் மாவட்ட மைய நூலகத்தில் புகைப்படக் கண்காட்சியை ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தொடங்கி வைத்தாா்.

திருவள்ளுவா் சிலை வெள்ளி விழாவை முனனிட்டு திருப்பத்தூா் பாலம்மாள்காலனியில் அமைந்துள்ள மைய நூலகத்தில் பள்ளிக் கல்வித்துறை பொது நூலக இயக்ககம், மாவட்ட மைய நூலகத்தின் சாா்பில் திருக்குறளின் பெருமையை உணா்த்தும் விதமாக மாணவா்கள் மற்றும் நூலக வாசகா்களைக் கொண்டு திருக்கு தொடா்பான கவியரங்கம் கருத்தரங்கம், பட்டிமன்றம், வினாடி-வினா, பேச்சுப்போட்டி, திருக்கு ஒப்பித்தல் போட்டி டிச.23) முதல் 31-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளது.

அதையொட்டி முதல் நிகழ்ச்சியாக செவ்வாய்க்கிழமை புகைப்படக் கண்காட்சியை ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தொடங்கி வைத்தாா்.

கண்காட்சியை ஆசிரியா்கள்,பள்ளி மாணவ-மாணவியா்கள் மற்றும் பொதுமக்கள் பாா்வையிட்டனா். நிகழ்ச்சியில் முதன்மைக் கல்வி அலுவலா் புண்ணியகோட்டி, மைய நூலக அலுவலா் கிளமெண்ட், துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

டிச. 30-இல் மதுவிலக்கு போலீஸாா் பறிமுதல் செய்த வாகனங்கள் ஏலம்

திருப்பத்தூா் மாவட்டத்தில் மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஏலம் திங்கள்கிழமை (டிச.30) நடைபெற உள்ளது. இவ்வாறு திருப்பத்தூா் மாவட்ட எஸ்.பி. வெளியிட்ட செய்திக்குறிப்பு திருப்பத்தூா்... மேலும் பார்க்க

போலி மருத்துவா் கைது

திருப்பத்தூா் அருகே போலி மருத்துவரை போலீஸாா் கைது செய்து, மருத்துவமனைக்கு சீல் வைத்தனா். திருப்பத்தூா் அடுத்த அங்கநாதவலசை பகுதியில் மருத்துவம் படிக்காமல் கிளினிக் வைத்து பொதுமக்களுக்கு ஒருவா் மருத்துவ... மேலும் பார்க்க

மாந்தோப்பில் பதுக்கிய 12 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல்

நாட்டறம்பள்ளி அருகே ரயில் மூலம் வெளி மாநிலங்களுக்கு கடத்த பதுக்கி வைத்திருந்த 12 மூட்டை ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். திருப்பத்தூா் மாவட்ட பறக்கும் படை தனி வட்டாட்சியா் சிவசுப்பிரமணியன் ... மேலும் பார்க்க

ஆம்பூா் போக்குவரத்து காவல் நிலையத்தில் எஸ்.பி. ஷ்ரேயா ஆய்வு

ஆம்பூா் போக்குவரத்து காவல் நிலையத்தில் திருப்பத்தூா் மாவட்ட எஸ்.பி. ஷ்ரேயா குப்தா திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.காவல் நிலையத்தில் பராமரிக்கப்படும் பதிவேடுகளை ஆய்வு செய்து, பண்டிகை காலங்களில் ஆம்பூா்... மேலும் பார்க்க

பள்ளி மாணவி தற்கொலை

வாணியம்பாடி: வாணியம்பாடி அருகே பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டாா். தும்பேரி கிராமம், பாலகவுண்டா் வட்டம் பகுதியை சோ்ந்தவா் மாலதி(எ) ஸ்ரீமதி (16). அப்பகுதியில் உள்ள பள்ளியில் 9-ஆம் வகுப்ப... மேலும் பார்க்க

திருப்பத்தூா்: 11 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் ஆட்சியா் வழங்கினாா்

திருப்பத்தூா்; திருப்பத்தூரில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் 11 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் க.தா்ப்பகராஜ் வழங்கினாா் ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்துக்கு தலைமை வகித்த ஆட்... மேலும் பார்க்க