செய்திகள் :

திருப்பரங்குன்றத்தில் குடமுழுக்கு கோலாகலம்: விண்ணதிர்ந்த ‘முருகனுக்கு அரோகரா..’ கோஷம்!

post image

மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு இன்று (ஜூலை 14) காலை கோலாகலமாக நடைபெற்றது.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு விழாவையொட்டி, ஞாயிற்றுக்கிழமை காலையில் விக்னேஸ்வர பூஜை, புனித நீர் தெளித்தல், விஷேச சாந்தி நடைபெற்று 6 ஆம் கால யாக சாலை பூஜை, பூர்ணாஹுதி நடைபெற்றது. மாலை 5 மணிக்கு 7 ஆம் கால யாக சாலை பூஜை நடைபெற்றது.

பல்லவர் காலத்தில் கட்டப்பட்ட குடைவரைக் கோயிலான திருப்பரங்குன்றத்தில் 14 ஆண்​டு​களுக்கு பிறகு இன்று கும்​பாபிஷேகம் நடை​பெறுவதையொட்​டி, கடந்த சில மாதங்​களாக திருப்​பணி​கள் மேற்​கொள்​ளப்​பட்​டன. ரூ.2.44 கோடி​யில் ராஜகோபுரத்​தில் 7 தங்க கலசம், அம்​பாள் சந்​நிதி மற்​றும் கணபதி கோயி​லில் தலா ஒரு கலசம் என 9 கலசங்​கள் அமைக்கப்பட்​டுள்​ளன.

நேற்றிரவு மூலவர் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன், கற்பக விநாயகர், சத்தியகிரீஸ்வரர், துர்க்கை, பவளக்கனிவாய்ப் பெருமாள் ஆகிய சுவாமிகளுக்கு காப்புக் கட்டப்பட்டது. தொடர்ந்து, தர்ப்பைக் கயிறு, பட்டு நூல் கொண்டு (ஸ்பாரிசாகுதி) சுவாமிக்கு சக்தி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

குடமுழுக்கு விழாவையொட்டி, மதுரை மாவட்டம் மட்டுமின்றி தமிழகம் முழுவதுமிருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருப்பரங்குன்றத்தில் குவிந்தனர். மாநிலம் முழுவதுமிருந்து பக்தர்கள் குவித்திருப்பதால் கோயில் நகரமாக மதுரை மாநகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது.

குடமுழுக்கை முன்னிட்டு, இன்று அதிகாலை 3.30 மணிக்கு மங்கள வாத்தியம் முழங்க 3.45 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, புனித நீர் தெளித்தல், எட்டாம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.

அதைத் தொடர்ந்து காலை 5.30 மணியளவில் கோபுர கலசங்கள் மீது புனித நீர் ஊற்றப்பட்டது. 10-க்கும் மேற்பட்ட ட்ரோன்​கள் மூலம் குடமுழுக்கு நிகழ்ச்சியில் பயன்படுத்தப்பட்ட புனித நீரை பக்​தர்​கள் மீது தெளிக்க ஏற்​பாடு செய்​யப்​பட்​டுள்​ளது.

Kudamuzhu celebration Thiruparankundram

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை, 10 மாவட்டங்களில் மழை!

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் கார... மேலும் பார்க்க

தேர்தலுக்கு தயாராகும் தேமுதிக! பிரேமலதா சுற்றுப்பயணம்!

அடுத்தாண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் தேமுதிக பொதுச் செயலர் பிரேமலதா விஜயகாந்த்.எதிர்வரும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ள அரசியல் ... மேலும் பார்க்க

இன்னொரு தாயாக இருந்தவர் சரோஜா தேவி: கமல்

மூத்த நடிகை சரோஜா தேவியின் மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.நடிகை சரோஜா தேவி வயது (87) முதிர்வால் இன்று(திங்கள்கிழமை) காலை காலமானார்.பெங்களூரு மல்லேஸ்வரம் பகுதியில் உள்ள வீட்டில் வய... மேலும் பார்க்க

பிடிவாரண்ட் வழக்குகள் எத்தனை நிலுவை? காவல்துறை பதிலளிக்க உத்தரவு!

சென்னை: தமிழகம் முழுவதும் எத்தனை வழக்குகளில் பிடிவாரண்ட்கள் பிறப்பிக்கப்பட்டு, நிலுவையில் உள்ளன என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறை டிஜிபி மற்றும் சென்னை காவல் ஆணையருக்கு சென்னை உயர் நீதிம... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி அருகே விஷ காய் சாப்பிட்ட 5 சிறுவர்கள் மருத்துவமனையில் அனுமதி

கிருஷ்ணகிரி அருகே விஷ காய் சாப்பிட்ட 5 சிறுவர்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.வேப்பனப்பள்ளியை அடுத்த பில்லன குப்பம், கே.திப்பனப்பள்ளி கிராமம் சிவசக்தி நகரைச் சே... மேலும் பார்க்க

வாய்ப்பளித்தால் அதிமுகவுடன் நிபந்தனையின்றி இணைப்பு: ஓபிஎஸ் அறிவிப்பு!

அதிமுகவுடன் உரிமை மீட்புக் குழுவை இணைக்க வாய்ப்பிருந்தால் எந்த நிபந்தனையும் இன்றி இணைவேன் என்று முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.மக்களவைத் தேர்தலின்போது அதிமுக தனித்துப் போட்டியிட்ட... மேலும் பார்க்க