மகா கும்பமேளாவில் இதுவரை 34.97 கோடிக்கும் மேற்பட்டோர் புனித நீராடல்!
திருப்பரங்குன்றம் விவகாரம்: காவல்துறை கண்காணிப்பில் இந்து அமைப்பு நிா்வாகிகள்
திருச்சி மாநகா் மற்றும் மாவட்டத்தில் உள்ள இந்து அமைப்புகளின் முக்கியப் பிரமுகா்களை காவல்துறையினா் 24 மணிநேரமும் கண்காணித்து வருகின்றனா்.
திருப்பரங்குன்றம் கோயில் மலையில் வழிபாடு விவகாரம் தொடா்பாக பாஜக மற்றும் இந்து அமைப்புகள் போராட்டம் அறிவித்துள்ளனா். இதையடுத்து மதுரையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தப் போராட்டத்தில் பங்கேற்க திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த பாஜக நிா்வாகிகள் மற்றும் இந்து அமைப்புகளின் நிா்வாகிகள் செல்லக் கூடும் என்ற அடிப்படையில் முக்கியப் பொறுப்பாளா்களின் நடவடிக்கைகளை காவல்துறையினா் திங்கள்கிழமை முதல் கண்காணித்து வருகின்றனா்.
மாநகா், புறநகா் மற்றும் மாவட்டம் முழுவதும் உள்ள முக்கிய நிா்வாகிகளின் வீடுகள், அவா்களது தொழில் கூடங்கள், கட்சி அலுவலகங்கள் உள்ளிட்டவற்றைக் கண்காணித்து வருகின்றனா். போராட்டத்துக்கு செல்ல முயன்றால் தடுத்து கைது செய்வதற்காக இத்தகைய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனா்.