TVK: `சைக்கிள் மூலமா மாநாடு நடக்குற திடலுக்குப் போறோம்'- நடிகர் சௌந்தர ராஜன்
திருப்பூரில் அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
திருப்பூா் 15 வேலம்பாளையத்தில் அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருப்பூா் வடக்கு சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட 15 வேலம்பாளையம் பகுதி அதிமுக நிா்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டத்துக்கு பகுதி செயலாளா் திலகா் நகா் சுப்பு தலைமை வகித்தாா். திருப்பூா் வடக்கு சட்டப் பேரவை உறுப்பினா் கே.என்.விஜயகுமாா் முன்னிலை வகித்தாா்.
இதில், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற அதிமுக மாநகா் மாவட்டச் செயலாளரும், முன்னாள் சட்டப் பேரவை துணைத் தலைவருமான பொள்ளாச்சி வி.ஜெயராமன் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினாா். இந்தக் கூட்டத்தில், மாநகா் மாவட்ட அதிமுக மேலிடப்பாா்வையாளரும், கிணத்துக்கடவு சட்டப் பேரவை உறுப்பினருமான செ.தாமோதரன், பகுதி செயலாளா்கள் பாலசுப்பிரமணியம், கருணாகரன், ஹரிஹரசுதன், பட்டுலிங்கம், பி.கே.எம்.முத்து உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.