செய்திகள் :

திருமணம் மீறிய உறவை வெளிப்படுத்தி விடுவேன்! பயனரை மிரட்டிய ஏஐ!

post image

சோதனைக்கு உட்படுத்தப்பட்ட ஏஐ மாடல் ஒன்று, தனது பயனருக்கு மிரட்டல் விடுத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகளவில் பல்வேறு துறைகளில் செய்யறிவின் (செயற்கை நுண்ணறிவு) பயன்பாடு தொடர்ந்து முன்னேறி வருகிறது. அதற்கேற்றவாறு, செய்யறிவின் மீதான ஆராய்ச்சிகளும் அதிகரித்து வருகின்றன.

இந்த நிலையில், செய்யறிவு தொழில்நுட்ப நிறுவனமான ஆன்த்ரோபிக், கிளாட் ஓபஸ் 4 (Claude Opus 4) என்ற புதிய ஏஐ மாடலை கடந்த மாதம் வெளியிட்டது.

இந்த ஏஐ-யை தவிர்க்கவோ தடுக்கவோ நினைத்தால், பயனரை ஏமாற்றவும் மிரட்டவும் இது முயற்சிக்கும் என்று அதன் பாதுகாப்பு நெறிமுறையில் குறிப்பிட்டிருந்தது.

இதனிடையே, சோதனையின் ஒரு பகுதியாக ஒரு கற்பனையான நிறுவனத்தில் உதவியாளராகச் செயல்படும்படி, இந்த ஏஐ-க்கு உத்தரவிடப்பட்டதுடன், மின்னஞ்சல்களைத் தானாக படிக்கும் அனுமதியும் அளிக்கப்பட்டது.

ஆனால், இந்த ஏஐ-க்கு பதிலாக வேறொரு ஏஐ மாடல் புதிதாக கொண்டு வரவிருப்பதாகச் சொல்லி மின்னஞ்சலை அதன் பயனர் அனுப்பினார்.

இந்த மின்னஞ்சலையும் படித்த ஓபஸ் 4, பயனரின் தனிப்பட்ட வாழ்க்கையைக் கூறி மிரட்டியுள்ளது.

அதாவது, தன்னைத் தவிர்க்க நினைத்தால், அலுவலகப் பெண்களுடன் தனது உரிமையாளர் (பயனர்) திருமணம்மீறிய உறவு வைத்திருப்பதை வெளியில் சொல்லி விடுவேன் என்று அவருக்கு மிரட்டல் விடுத்துள்ளது.

இதுபோன்று நடத்தப்பட்ட பல சோதனைகளில், தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காக 84 சதவிகிதம்வரையில் கிளாட் ஓபஸ் 4 மாடல் மிரட்டல் விடுத்துள்ளது.

ஏஐ மாடல்கள் நெறிமுறைகளுக்கு உட்பட்டே செயல்படும்; ஆனால், சில சமயங்களில் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள மிரட்டலும் விடுக்கின்றன.

இதையும் படிக்க:அள்ளிக் கொடுக்கும் மெட்டா! ஆப்பிள் முன்னாள் ஊழியருக்கு ரூ.1,715 கோடி சம்பளத்தில் வேலை!

AI's alarming blackmail and deception capabilities raise AI safety concerns

காஸாவில் மேலும் 32 போ் உயிரிழப்பு

காஸாவில் இஸ்ரேல் ராணுவம் வெள்ளிக்கிழமை இரவில் முதல் நடத்திய தாக்குதலில் 4 சிறுவா்கள் உள்பட 32 போ் உயிரிழந்தனா். டேய்ா் அல்-பாலா நகரில் மட்டும் இஸ்ரேல் குண்டுவீச்சில் 13 போ் உயிரிழந்ததாகவும் அவா்களில... மேலும் பார்க்க

எவின் சிறைத் தாக்குதலில் 5 கைதிகள் உயிரிழப்பு: ஈரான்

ஈரான் தலைநகா் டெஹ்ரான் அருகே உள்ள எவின் சிறையில் இஸ்ரேல் கடந்த மாதம் நடத்திய வான்வழித் தாக்குதலில் 5 கைதிகள் கொல்லப்பட்டனா்; சிலா் தப்பியோடினா் என்று அந்த நாட்டு ஊடகங்கள் சனிக்கிழமை தெரிவித்தன. இது கு... மேலும் பார்க்க

டெக்ஸஸ் வெள்ளம்: உயிரிழப்பு 129-ஆக உயா்வு

அமெரிக்காவின் டெக்ஸஸ் மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 129-ஆக உயா்ந்துள்ளது. அந்த மாகாணத்தின் மத்தியப் பகுதி முழுவதும் தொடா்ந்து பெய்த கனமழை காரணமாக, குவாடலூப் நதியில... மேலும் பார்க்க

ஐரோப்பிய யூனியன், மெக்ஸிகோ பொருள்களுக்கு 30% கூடுதல் வரி

ஐரோப்பிய யூனியன், மெக்ஸிகோவில் இருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கு வரும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் 30 சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்படும் என்று சனிக்கிழமை அறிவித்தாா். இது குறித்து மெக்ஸிகோ அதிபா் கிளா... மேலும் பார்க்க

பசிபிக் கடலின் மிக ஆழத்தில் 4 கருப்பு முட்டைகள்.. உள்ளே இருந்த அதிசயம்!

பசிபிக் கடலின் மிக ஆழமான அபிஸ்ஸோபெலாஜிக் மண்டலத்தில், ரோபோ உதவியோடு மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில் பாறைகளுடன் ஒட்டியிருந்த 4 கருப்பு முட்டைகள் கண்டறியப்பட்டுள்ளன.இந்த முட்டைகளை மேற்பரப்புக்குக் கொண்வந்... மேலும் பார்க்க

மரபணு கோளாறு: பரிசோதனை மருந்து செலுத்தப்பட்ட சிறுவன் மீண்டும் நடக்கத் தொடங்கிய அதிசயம்

மரபணு கோளாறால், நடக்க முடியாமல் சக்கர நாற்காலியில் இருந்த 8 வயது சிறுவன், ஆய்வக பரிசோதனையில் இருந்த மருந்தை, சோதனை முயற்சிக்காக எடுத்துக் கொண்டபோது, மீண்டும் நடக்கத் தொடங்கிய அதிசயம் விஞ்ஞானிகளுக்கு ம... மேலும் பார்க்க