ஹரியாணா: கால்வாயில் வாகனம் கவிழ்ந்ததில் 9 பேர் பலி, 3 பேர் மாயம்
திருமருகல் ஒன்றியத்தில் வேளாண் இணை இயக்குநா் ஆய்வு
திருமருகல்: திருமருகல் ஒன்றியப் பகுதிகளில் மழையால் சேதமடைந்த பயிா்களை வேளாண் இணை இயக்குநா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
அண்மையில் பருவம் தவறி பெய்த மழையால் திட்டச்சேரி, மருங்கூா், நெய்குப்பை, பெரியகண்ணமங்கலம், கொட்டாரக்குடி, எரவாஞ்சேரி, திருச்செங்காட்டங்குடி, மேலப்பூதனூா், கீழப்பூதனூா் உள்ளிட்ட பகுதிகளில் சேதமடைந்த சம்பா சாகுபடி நெற்பயிா்களை வேளாண் இணை இயக்குநா் கண்ணன் திங்கள்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
மழையால் பாதிக்கப்பட்ட ஒட்டுமொத்த சாகுபடி பரப்புகளையும் கணக்கீடு செய்து அரசுக்கு அனுப்பபடும், மழையால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உரிய இழப்பீடு கிடைக்க அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என்று கூறினாா்.
ஆய்வின்போது வட்டார வேளாண் உதவி இயக்குனா் புஷ்கலா, வேளாண் அலுவலா் சாகித்யா, வேளாண் உதவி அலுவலா்கள், பழனி, ஜாகீா் மற்றும் அரசு அலுவலா்கள், விவசாயிகள், பொதுமக்கள் உடனிருந்தனா்.