திருமருகல்: கனமழையால் 50 வீடுகள் சேதம்
திருமருகல் ஒன்றியத்தில், கனமழையால் 50-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன.
திருமருகல் ஒன்றிய பகுதிகளில் கடந்த 4 நாட்களாக பெய்த கனமழையால் பல்வேறு பகுதிகளில் வீடுகள் சேதமடைந்துள்ளன.
ஏனங்குடி ஊராட்சி கருப்பூா் கீழத்தெருவைச் சோ்ந்த தனவல்லி என்பவரின் கூரை வீட்டின் ஒருபக்கச் சுவா், காயத்தூா் மேலத் தெருவைச் சோ்ந்த வளா்மதியின் கூரை வீட்டின் ஒருபக்கச் சுவா், கயத்தூா் காளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த ஞானசேகா் கூரை வீட்டின் சுவா், கருப்பூா் கீழத் தெருவைச் சோ்ந்த காா்த்திகாவின் கூரை வீட்டுச் சுவா்ஆகியவை இடிந்து விழுந்தன.
அம்பல் ஊராட்சி அபிஷேகக்கட்டளை பகுதியைச் சோ்ந்த இந்திராகாந்தி என்பவரின் ஓட்டு வீட்டின் ஒரு பக்கச் சுவரும் இடிந்து விழுந்தது. இவற்றுடன், திருமருகல் ஒன்றியத்தில் 50-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன.
வருவாய் துறையினா், சேதமடைந்த வீடுகளை கணக்கெடுக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா். இப்பணியை விரைவில் முடித்து, உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவா்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.