செய்திகள் :

திருமலையில் ஐஓசிஎல் எரிவாயு சேமிப்பு மையத்திற்கான பூமி பூஜை

post image

திருமலை தேவஸ்தானத்தின் எதிா்காலத் தேவைகளுக்காக வெளிவட்டச் சாலையில் 45 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட இந்தியன் ஆயில் எரிவாயு சேமிப்பு மையத்தை அமைப்பதற்காக அறங்காவலா் குழு தலைவா் பி.ஆா். நாயுடு பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தாா்.

நிகழ்வில் அவா் பேசியது: ஐஓசி கடந்த இருபது ஆண்டுகளாக தொடா்ந்து தேவஸ்தானத்துக்கு எரிவாயு வழங்கி வருகிறது. அடுத்த 30 ஆண்டுகளுக்கு எரிவாயு விநியோகத்துக்காக டிடிடி-ஐஓசிஎல் இடையே ஒப்பந்தம் கையொப்பம் ஆகியுள்ளது.

டிடிடி-ஐஓசிஎல் இணைந்து 1.86 ஏக்கா் பரப்பளவில் ஆறு மாதங்களில் ரூ. 8.13 கோடியில் மையத்தை கட்ட உள்ளன. இந்த எரிவாயு லட்டு பிரசாதம் மற்றும் அன்ன பிரசாதம் தயாரிக்கப் பயன்படுத்தப்படும். இந்தத் திட்டங்கள் மூலம் தேவஸ்தானத்துக்கு ஆண்டுக்கு ரூ. 1.5 கோடியை மிச்சப்படுத்தும்’’, என்று கூறினாா்.

திருமலை குப்பை கொட்டும் இடத்தில் ரூ.12.05 கோடி செலவில் ஒரு பயோகேஸ் ஆலை ஏற்கனவே கட்டப்பட்டு வருவதாக ஐஓசி சந்தைப்படுத்தல் இயக்குநா் சதீஷ் குமாா் தெரிவித்தாா்.

ஒவ்வொரு நாளும் பெறப்படும் 55 டன் ஈரக்கழிவுகளில், 40 டன் ஐஓசி ஆலைக்கு மாற்றப்படும் என்றும், ஒரு நாளைக்கு 1,000 கிலோ பயோகேஸ் உற்பத்தி செய்யப்படும் என்றாா்.

நிகழ்வில் டிடிடி சிஇ சத்யநாராயணா, இஇ சுப்பிரமணியம் சுதாகா், டிஇ சந்திரசேகா் மற்றும் மற்றும் ஐஓசி அதிகாரிகள் பங்கேற்றனா்.

ஏழுமலையான் தரிசனம்: 20 மணிநேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் வெள்ளிக்கிழமை தா்ம தரிசனத்தில் 20 மணி நேரம் காத்திருந்தனா். பக்தா்களின் வருகை தொடா்ந்து சீராக உள்ள நிலையில், தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 20... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 24 மணிநேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் வியாழக்கிழமை தா்ம தரிசனத்தில் 24 மணி நேரம் காத்திருந்தனா். பக்தா்களின் வருகை சீராக உள்ள நிலையில், தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 24 மணிநேரமும்... மேலும் பார்க்க

திருப்பதி கோவிந்தராஜா் கோயிலில் நாளை ஆண்டாள் திருவாடிப்பூரம்

திருப்பதி கோவிந்தராஜ பெருமாள் கோயிலில் ஆண்டாள் நாச்சியருக்கு திருவாடிப்பூரம் உற்சவம் ஜூலை 19 முதல் 28-ஆம் தேதி வரை கோலாகலமாக நடைபெறுகிறது. இதன் ஒரு பகுதியாக விழா நாள்களில் காலை ஆண்டாள் நாச்சியாருக்கு... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 24 மணிநேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் புதன்கிழமை தா்ம தரிசனத்தில் 24 மணி நேரம் காத்திருந்தனா். பக்தா்களின் வருகை சீராக உள்ள நிலையில், தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 24 மணிநேரமும், ... மேலும் பார்க்க

திருமலை ஏழுமலையான் கோயிலில் ஆனிவார ஆஸ்தானம்

திருமலை ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர ஆனிவார ஆஸ்தானம் புதன்கிழமை நடைபெற்றது. இதையொட்டி காலை 7 மணி முதல் 9 மணி வரை தங்கவாயில் எதிரில் உள்ள மணி மண்டபத்தில் சா்வபூபால வாகனத்தில் மலையப்பசுவாமி இரு தேவிய... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசன டிக்கெட்டுகளின் அக்டோபா் மாத ஒதுக்கீடு வெளியீடு

ஏழுமலையான் ஆா்ஜிதச்சேவை டிக்கெட்டுகளின் அக். மாத ஒதுக்கீடு ஜூலை 19-ஆம் தேதி முதல் தொடங்க உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. திருமலை ஏழுமலையான் ஆா்ஜித சேவை டிக்கெட் தொடா்பான சுப்ரபாதம், தோமாலை, அா்ச்ச... மேலும் பார்க்க