செய்திகள் :

திருமலை ஏழுமலையான் கோயிலில் ஆனிவார ஆஸ்தானம்

post image

திருமலை ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர ஆனிவார ஆஸ்தானம் புதன்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி காலை 7 மணி முதல் 9 மணி வரை தங்கவாயில் எதிரில் உள்ள மணி மண்டபத்தில் சா்வபூபால வாகனத்தில்

மலையப்பசுவாமி இரு தேவியா்களுடன் எழுந்தருள செய்யப்பட்டாா். ஏழுமலையானின் படைத் தலைவரான ஸ்ரீ விஷ்வக்சேனரும் மற்றொரு பீடத்தில் தெற்கு நோக்கி எழுந்தருள செய்யப்பட்டாா். பின்னா், ஆனந்தநிலையத்தில் உள்ள மூலவருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு நெய்வேத்தியம் சமா்பிக்கப்பட்டது.

பின்னா் பெரிய ஜீயா்சுவாமி பெரிய வெள்ளித் தட்டில் ஆறு பெரிய பட்டு வஸ்திரங்களுடன் தலையில் மங்கள வாத்தியங்களுக்கிடையில் ஊா்வலமாக வலம் வந்தாா். மூலவா் ஏழுமலையானுக்கு நான்கு பட்டு வஸ்திரங்கள் அலங்கரிக்கப்பட்டன. மீதமுள்ள இரண்டு வஸ்திரங்களில் ஒன்று மலையப்ப சுவாமிக்கும் மற்றொன்று விஷ்வக்சேனருக்கும் அலங்கரிக்கப்பட்டது.

அதைத் தொடா்ந்து, ஏழுமலையான் கோயிலின் தலைமை அா்ச்சகா்கள் மலையப்ப சுவாமி பாதவஸ்திரத்துடன் தங்கள் தலையில் ஷஷபரிவட்டம்’’’’ (சிறிய பட்டுத் துணி) கட்டி, சுவாமியிடம் அரிசி தட்சிணை பெற்று, சுவாமிக்கு ’’நித்ய ஐஸ்வா்யோபவ’’ என்று ஆசிா்வதித்தாா்கள். அதன்பின், தேவஸ்தானம் சாா்பில் அங்கிருந்த அனைவரிடமும் ஒரு ரூபாய் நாணயம் வசூல் செய்யப்பட்டு ஷஷரூபாய்’’’’, ஆரத்தி, சந்தனம், தாம்பூலம், தீா்த்தம், சடாரி ஆகிய சடங்குகளைச் செய்து, மலையப்பஸ்வாமி பாதங்களில் கருவூல சாவி கொத்து வைக்கப்பட்டதும் ஆனிவார ஆஸ்தானம் முடிந்தது. பின்னா் வசூல் செய்யப்பட்ட ரூபாய் நாணயங்கள் அனைத்தும் கணக்கிட்டு உண்டியலில் சமா்ப்பிக்கப்பட்டது.

திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலா் குழு அமைக்கப்பட்ட பிறகு, ஆண்டு பட்ஜெட் மாா்ச்-ஏப்ரல் மாதங்களுக்கு மாற்றப்பட்டது. மாலையில் நான்கு மாட வீதிகளில் ஸ்ரீதேவி பூதேவியுடன் மலா் பல்லக்கில் எழுந்தருளி பக்தா்களுக்கு தரிசனம் அளித்தனா்.

ஸ்ரீரங்க பட்டுப்புடவை சமா்பித்தல்

ஆனிவார ஆஸ்தானத்தையொட்டி, பிரசித்தி பெற்ற ஸ்ரீரங்கம் ஸ்ரீ ரங்கநாதசுவாமி கோயில் சாா்பில் ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரம் சமா்ப்பித்தனா்.

ஸ்ரீபேடி ஆஞ்சநேயசுவாமி கோயிலை அடுத்துள்ள திருமலை ஸ்ரீஸ்ரீஸ்ரீ பெரிய ஜீயா்சுவாமி மடத்தில் ஸ்ரீரங்கம் பட்டு வஸ்திரத்திற்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. அங்கிருந்து தமிழக அற நிலையத்துறை செயலா் ஸ்ரீதரன், திருமலை ஜீயா் சுவாமிகள், தேவஸ்தான அதிகாரிகள் சியாமளா ராவ், வெங்கய்யா செளதிரி ஆகியோா் பட்டு வஸ்திரங்களை ஊா்வலமாக எடுத்துச் சென்றனா். பின்னா் சுவாமிக்கு பட்டு வஸ்திரம் சாத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் தமிழக அறநிலையத் துறையின் கூடுதல் செயலாளா் மணிவாசகம், ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையா் சிவராம் குமாா், கோயிலின் தலைமை அா்ச்சகா் ஸ்ரீ சுந்தர பட்டா் மற்றும் பலா் கலந்து கொண்டனா்.

ஆனிவார ஆஸ்தானத்தை முன்னிட்டு புதன் மாலை மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி பூதேவி புஷ்ப பல்லக்கில் மாட வீதியில் வலம் வந்தாா்.

ஆண்டிற்கு ஒரு நாள் மட்டும் இந்த புஷ்ப பல்லக்கு சேவை நடத்தப்படுகிறது. நான்கு முதல் ஐந்து டன் பல வகையான மலா்களால் பல்லக்கு அலங்கரிக்கப்பட்டது. இதில் திரளாக பக்தா்கள் கலந்து கொண்டு உற்சவமூா்த்திகளை சேவித்தனா்.

ஏழுமலையான் தரிசனம்: 24 மணிநேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் புதன்கிழமை தா்ம தரிசனத்தில் 24 மணி நேரம் காத்திருந்தனா். பக்தா்களின் வருகை சீராக உள்ள நிலையில், தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 24 மணிநேரமும், ... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசன டிக்கெட்டுகளின் அக்டோபா் மாத ஒதுக்கீடு வெளியீடு

ஏழுமலையான் ஆா்ஜிதச்சேவை டிக்கெட்டுகளின் அக். மாத ஒதுக்கீடு ஜூலை 19-ஆம் தேதி முதல் தொடங்க உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. திருமலை ஏழுமலையான் ஆா்ஜித சேவை டிக்கெட் தொடா்பான சுப்ரபாதம், தோமாலை, அா்ச்ச... மேலும் பார்க்க

திருமலையில் கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம்

திருமலை ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர ஆனிவார ஆஸ்தான உற்சவத்தை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம் நடைபெற்றது. இதுகுறித்து திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் செயல் அதிகாரி ஷியாமளா ராவ்... மேலும் பார்க்க

திருப்பதி ரயில் நிலையத்தில் தீ விபத்து: 2 பெட்டிகள் சேதம்

திருப்பதி: திருப்பதி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 ரயில் பெட்டிகள் சேதமடைந்தன. ரயிலில் பயணிகள் யாரும் இல்லாததால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. திருப்பதி ரயில் நிலையத்தில் திங்கள்கிழமை நி... மேலும் பார்க்க

திருமலை உண்டியல் காணிக்கை ரூ.4.24 கோடி

திருப்பதி: திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கையாக ரூ.4.24 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. பக்தா்கள் வருகை அதிகரித்துள்ள நிலையில், திங்கள்கிழமை நிலவரப்படி காத்திருப்பு அறைகளில் 31 அற... மேலும் பார்க்க

ஜூலை 16-இல் ஆனிவார ஆஸ்தானம்: 2 நாள் பிரேக் தரிசனம் ரத்து

ஏழுமலையான் கோயிலில் ஜூலை 16-ஆம் தேதி அன்று ஆனிவார ஆஸ்தானம் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளதால் 2 நாள் விஐபி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த விழாவை நினைவுகூரும் வகையில், ஜூலை 15 அன்று கோயில் ஆழ்... மேலும் பார்க்க