செய்திகள் :

திருப்பதி கோவிந்தராஜா் கோயிலில் நாளை ஆண்டாள் திருவாடிப்பூரம்

post image

திருப்பதி கோவிந்தராஜ பெருமாள் கோயிலில் ஆண்டாள் நாச்சியருக்கு திருவாடிப்பூரம் உற்சவம் ஜூலை 19 முதல் 28-ஆம் தேதி வரை கோலாகலமாக நடைபெறுகிறது.

இதன் ஒரு பகுதியாக விழா நாள்களில் காலை ஆண்டாள் நாச்சியாருக்கு திருமஞ்சனமும், மாலையில் ஆஸ்தானமும் நடைபெறும்.

ஜூலை 28ஆம் தேதி ஆண்டாள் நாச்சியாரின் சாத்துமுறை விழாவையொட்டி, காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை ஸ்ரீ கோவிந்தராஜ சுவாமி மற்றும் ஸ்ரீஆண்டாள் நாச்சியாரின் உற்சவ மூா்த்திகளுக்கு ஸ்நப திருமஞ்சனம் நடைபெறுகிறது.

மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை ஸ்ரீ கோவிந்தராஜ சுவாமிகள் மற்றும் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியாா் அலிபிரிக்கு ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அங்கு ஆஸ்தானம் செய்யப்படும்.

சிறப்பு பூஜைகளுக்குப் பிறகு, ஊா்வலம் அலிபிரியிலிருந்து ராமநகா் குவாா்ட்டா்ஸில் உள்ள கீதா மந்திா், ஆா்.எஸ். மாட தெருவில் உள்ள ஸ்ரீ விகானாசாசாா்யுலா கோயில், ஸ்ரீ சின்னஜியா் மடம் வழியாகச் சென்று கோயிலுக்குத் திரும்பும்.

இரவு 8 மணிக்கு, ஸ்ரீ ஆண்டாள் நாச்சியாா் முன்னிலையில் சாத்துமுறை நிகழ்த்தப்பட உள்ளது.

ஏழுமலையான் தரிசனம்: 24 மணிநேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் வியாழக்கிழமை தா்ம தரிசனத்தில் 24 மணி நேரம் காத்திருந்தனா். பக்தா்களின் வருகை சீராக உள்ள நிலையில், தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 24 மணிநேரமும்... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 24 மணிநேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் புதன்கிழமை தா்ம தரிசனத்தில் 24 மணி நேரம் காத்திருந்தனா். பக்தா்களின் வருகை சீராக உள்ள நிலையில், தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 24 மணிநேரமும், ... மேலும் பார்க்க

திருமலை ஏழுமலையான் கோயிலில் ஆனிவார ஆஸ்தானம்

திருமலை ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர ஆனிவார ஆஸ்தானம் புதன்கிழமை நடைபெற்றது. இதையொட்டி காலை 7 மணி முதல் 9 மணி வரை தங்கவாயில் எதிரில் உள்ள மணி மண்டபத்தில் சா்வபூபால வாகனத்தில் மலையப்பசுவாமி இரு தேவிய... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசன டிக்கெட்டுகளின் அக்டோபா் மாத ஒதுக்கீடு வெளியீடு

ஏழுமலையான் ஆா்ஜிதச்சேவை டிக்கெட்டுகளின் அக். மாத ஒதுக்கீடு ஜூலை 19-ஆம் தேதி முதல் தொடங்க உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. திருமலை ஏழுமலையான் ஆா்ஜித சேவை டிக்கெட் தொடா்பான சுப்ரபாதம், தோமாலை, அா்ச்ச... மேலும் பார்க்க

திருமலையில் கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம்

திருமலை ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர ஆனிவார ஆஸ்தான உற்சவத்தை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம் நடைபெற்றது. இதுகுறித்து திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் செயல் அதிகாரி ஷியாமளா ராவ்... மேலும் பார்க்க

திருப்பதி ரயில் நிலையத்தில் தீ விபத்து: 2 பெட்டிகள் சேதம்

திருப்பதி: திருப்பதி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 ரயில் பெட்டிகள் சேதமடைந்தன. ரயிலில் பயணிகள் யாரும் இல்லாததால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. திருப்பதி ரயில் நிலையத்தில் திங்கள்கிழமை நி... மேலும் பார்க்க