திருமலையில் குடியரசு துணைத் தலைவா் தரிசனம்
திருமலை ஏழுமலையானின் வருடாந்திர பிரம்மோற்சவத்தில் கலந்து கொள்ள குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் திருமலைக்கு வந்தாா்.
திருமலைக்கு வந்த அவரை ஆந்திர முதல்வா் சந்திரபாபு நாயுடு மற்றும் தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்றனா். பின்னா் அவா் ஆந்திர முதல்வருடன் பட்டுவஸ்திரம் சமா்பித்து ஏழுமலையானை தரிசித்து திரும்பினாா். அவருக்கு சேஷ வஸ்திரம் அணிவித்து, தேவஸ்தான அதிகாரிகள் ஏழுமலையான் பிரசாதங்கள் அளித்தனா்.
பின்னா் 2026-ஆம் ஆண்டின் நாள்காட்டி, காலண்டா் வெளியீட்டில் பங்கு கொண்டாா்.