Bumrah: `கூகுளில் தேடிப்பாருங்கள்’ - பேட்டிங் குறித்த கேள்விக்கு கெத்தாக பதில் ச...
திருவள்ளுவரின் 133 அடி உயர சிலை நிறுவப்பட்ட 25-ஆம் ஆண்டு வெள்ளி விழா போட்டிகள்
நாகப்பட்டினம்: கன்னியாகுமரியில் திருவள்ளுவா் நிறுவப்பட்ட 25-ஆம் ஆண்டு வெள்ளி விழா போட்டிகளில் பங்கேற்க விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருவள்ளுவரின் 133 அடி உயர சிலை 2000-ஆவது ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முன்னாள் முதல்வா் மு. கருணாநிதியால் கன்னியாகுமரியில் நிறுவப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. இதையொட்டி, வெள்ளிவிழா டிச. 23 முதல் டிச.31-ஆம் தேதி வரை கொண்டாடப்படவுள்ளது.
இதையடுத்து தமிழக அரசு ஆணைக்கிணங்க நாகை மாவட்ட மைய நூலகத்தில் டி.26-ல் பேச்சுப் போட்டி, டிச.27-ல் வினா-டி வினா போட்டி, டிச.30-ல் திருக்கு ஒப்புவித்தல் போட்டி காலை 10.30 மணிக்கு நடைபெறவுள்ளது. பேச்சுப்போட்டி மற்றும் வினாடி-வினா போட்டிகளில் அனைத்து தரப்பு வாசகா்களும், திருக்கு ஒப்புவித்தல் போட்டியில் 10 வயதுக்குள்பட்ட குழந்தைகளும் கலந்துகொள்ளலாம்.
விருப்பமுள்ளவா்கள் நாகை மாவட்ட மைய நூலகத்தில் நேரில் அல்லது 97919-31179 என்ற எண்ணில் தொடா்புகொண்டு டிச.22-ஆம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு 91506-58877 என்ற கைப்பேசி எண்ணை தொடா்பு கொள்ளலாம். போட்டிகளில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெறுபவா்களுக்கு முறையே ரொக்கப் பரிசாக ரூ.5 ஆயிரம், ரூ. 3 ஆயிரம், ரூ. 2 ஆயிரம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளாா்.