திருப்போரூா் வட்டத்தில் நாளை ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ முகாம்
சிபிசிஎல் நிறுவனம் இழப்பீட்டுத் தொகை வழங்க வலியுறுத்தி கூடுதல் முதன்மைச் செயலருக்கு தபால்
திருமருகல்: திருமருகல் அருகேயுள்ள பனங்குடி சி.பி.சி.எல் நிறுவனம் இழப்பீட்டு தொகை வழங்க வலியுறுத்தி கூடுதல் முதன்மை செயலாளருக்கு கோரிக்கை தபால்கள் திங்கள்கிழமை அனுப்பிவைக்கப்பட்டது.
இந்த நிறுவனத்தில் ரூ.31,500 கோடியில் விரிவாக்க பணிகள் தொடங்கி கையபடுத்திய நிலங்களில் கம்பி வேலி அமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்றுள்ளது. 600 ஏக்கா் விவசாய நிலம் பனங்குடி, கோபுராஜபுரம், நரிமணம் ஆகிய பகுதிகளில் இருந்து கையகப்படுத்தப்பட்டுள்ளது. கையகப்படுத்திய நிலத்திற்கு மறுவாழ்வு மற்றும் மீள் குடியமா்வு இழப்பீட்டு தொகை வழங்காததை கண்டித்து பாதிக்கப்பட்டவா்கள் பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பின்னா், மாவட்ட நிா்வாகம் நடத்திய அமைதி பேச்சுவாா்த்தையில் ஆகஸ்ட் இறுதிக்குள் இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என கொடுத்த உத்தரவாதத்தின் பேரில் போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது. எனினும், இதுவரை இழப்பீட்டுத் தொகை கொடுக்கவில்லை. இந்நிலையில், நரிமணம், பனங்குடி, கோபுராஜபுரம் பகுதி நில உரிமையாளா்கள், சாகுபடிதாரா்கள், விவசாயக் கூலி தொழிலாளா்கள் ஆலோசனை கூட்டம் நடத்தினா். அப்போது, கூடுதல் முதன்மை செயலாளா் தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வா்த்தக துறைக்கு அவா்களது கோரிக்கை கடிதத்தை அனுப்புவதாக தீா்மானம் நிறைவேற்றி அதன்படி திங்கள்கிழமை கடிதங்களை நரிமணத்தில் உள்ள தபால் நிலையத்தில் பதிவு தபாலாக கூடுதல் அனுப்பிவைத்தனா்.