செய்திகள் :

திருவள்ளூர் உள்பட 3 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை!

post image

தமிழகத்தில் திருவள்ளூர் உள்பட மூன்று மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நேற்று (12-09-2025) வடக்கு ஆந்திர - தெற்கு ஒரிசா கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று (13-09-2025) காலை 0830 மணி அளவில் மத்தியமேற்கு, அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல், வடக்கு ஆந்திர - தெற்கு ஒரிசா கடலோரப்பகுதிகளில் நிலவுகிறது. இது, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, தெற்கு ஒரிசா மற்றும் அதனை ஒட்டிய வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு சத்திஸ்கர் பகுதிகளில் அடுத்த இரு தினங்களில் கடந்து செல்லக்கூடும்.

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

செப். 13 தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் , இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

திருவள்ளூர், ராணிப்பேட்டை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

செப். 16ல் வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

செப். 17ல் கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர், வேலூர், இராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

அதிகபட்ச வெப்பநிலை..

தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் அதிகபட்ச வெப்பநிலை 2-3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கு..

தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்றும் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்லவேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

The Meteorological Department has stated that there is a possibility of heavy rain in three districts in Tamil Nadu, including Thiruvallur, today.

இதையும் படிக்க: ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பை: தங்கம் வென்ற இந்திய வீராங்கனை!

இந்திய கம்யூ. தமிழ் மாநிலச் செயலாளராக மு. வீரபாண்டியன் தேர்வு! முதல்வர் வாழ்த்து!

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள மு. வீரபாண்டியனுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துப் பதிவில்,இந்த... மேலும் பார்க்க

இந்திய கம்யூ. தமிழ் மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன்!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளராக மு. வீரபாண்டியன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கட்சியின் துணைப் பொதுச் செயலாளராக இருந்த அவர், கட்சியின் இளைஞர் பிரிவான அகில இந்திய இளைஞர் கூட்டமைப... மேலும் பார்க்க

விஜய் கவுன்சிலர்கூட ஆகவில்லை! எப்படி விமர்சிக்க முடியும்? - நயினார் நாகேந்திரன்

பாஜகவை விஜய் விமர்சனம் செய்ய வேண்டிய தேவை இல்லை என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். சென்னை அமைந்தகரையில் இலவச மருத்துவ முகாமை தொடங்கிவைத்த தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் ச... மேலும் பார்க்க

வாக்குறுதிகளை நிறைவேற்றாதது ஏன்? விஜய் அடுக்கடுக்கான கேள்வி!

நீட் ரத்து, கல்விக் கடன் ரத்து, பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட வாக்குறுதிகள் ஏன் நிறைவேற்றவில்லை என்று தவெக தலைவர் விஜய் கேள்வி எழுப்பியுள்ளார். தவெக தலைவா் விஜய்யின் தமிழகம் முழுவதுமான மக்கள் சந்தி... மேலும் பார்க்க

திருச்சி கூட்டத்தில் மைக் கோளாறு! விஜய் பேசுவது கேட்காமல் திணறல்!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர், நடிகர் விஜய், திருச்சியில் இன்று தன்னுடைய முதல் பிரசாரக் கூட்டத்தைத் தொடங்கினார். முதல் கூட்டத்தில் பேசத் தொடங்கியதும், அவரது மைக் கோளாறு ஏற்பட்டு, விஜய் பேசுவது புரியாமல்... மேலும் பார்க்க

குற்றங்களே நடக்காத கிராமம்! காவல்நிலையத்தை பார்த்ததே இல்லையாம்!!

நகோன்: நாடு முழுவதும் ஒரு நாளில் நடைபெறும் குற்றச் சம்பவங்கள் பதிவு செய்யப்படுவது ஆயிரக்கணக்கில் இருக்கும் என்றால், பதிவு செய்யப்படாத குற்றங்கள் லட்சக்கணக்கில் இருக்கலாம். ஆனால், ஓரிடம் மட்டும் இதில் ... மேலும் பார்க்க