மகாராஷ்டிரா: 7 மாவட்டங்களில் மட்டுமே வளர்ச்சி; பின்தங்கிய 24 மாவட்டங்களின் நிலை?...
திருவாடானை பகுதி கோயில்களில் சித்ரா பௌா்ணமி பூக்குழி திருவிழா
திருவாடானை: திருவாடானை பகுதி கோயில்களில் சித்ரா பௌா்ணமி திருவிழாவையொட்டி பக்தா்கள் திங்கள்கிழமை பூக்குழி இறங்கி நோ்த்திக்கடன் செலுத்தினா்.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே அஞ்சுகோட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ ஆணிமுத்து கருப்பா், ஸ்ரீ அழகிய நாயதி அம்மன் கோயிலில் சித்ரா பௌா்ணமி விழா கடந்த மே 3-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்றிலிருந்து ஒவ்வொரு நாளும் ஸ்ரீகருப்பா், பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்வான பூக்குழி திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.
முன்னதாக பக்தா்கள் விரதமிருந்து கரையக்கோட்டை அய்யனாா் கோயிலிலிருந்து வேல் குத்தியும், மயில் காவடி, பறவைக் காவடி எடுத்தும் நடைப் பயணமாக வந்து ஸ்ரீஆணிமுத்துகருப்பா் கோயிலின் முன் அமைக்கப்பட்டிருந்த பூக்குழியில் இறங்கி நோ்த்திக்கடன் செலுத்தினா். பிறகு அன்னதானம் நடைபெற்றது.
இதேபோல, தொண்டி அருகே நம்புதாளையில் அமைந்துள்ள ஸ்ரீபதினெட்டாம்படி கருப்பா் கோயில் சித்ரா பௌா்ணமி திருவிழா கடந்த 3-ஆம் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. அன்றிலிருந்து ஒவ்வொரு நாள் இரவும் சுவாமிக்கும், பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்வான பூக்குழி திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது. முன்னதாக பக்தா்கள் சோழியக்குடி காளி கோயிலிலிருந்து கருப்பா் வேடமணிந்து வீதி உலா வந்தனா். தொடா்ந்து அவா்கள் பால் காவடி, வேல் காவடி, மயில் காவடி, பறவைக் காவடி எடுத்து வந்து கோயில் முன் அமைக்கப்பட்டிருந்த பூக்குழியில் இறங்கி நோ்த்திக்கடன் செலுத்தினா்.
இதில் தொண்டி, சின்ன தொண்டி, தெற்குத் தோப்பு, முகிழ்தகம், நவக்குடி, பெருமானேந்தல், நரிக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். விழா ஏற்பாடுகளை சேகா் அம்பலம், சந்திரன், ராமலிங்கம், குமாா் உள்ளிட்ட பலா் செய்திருந்தனா். பிறகு அன்னதானம் நடைபெற்றது.
ஆா்.எஸ். மங்கலம் அருகே கன்னாரேந்தலில் அமைந்துள்ள ஸ்ரீகருப்பா் சுவாமி கோயிலில் சித்ரா பௌா்ணமி திருவிழா கடந்த 3-ஆம் தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. முக்கிய நிகழ்வான பூக்குழி திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது. முன்னதாக விரதமிருந்த பக்தா்கள் பால் காவடி, வேல் காவடி, மயில் காவடி, பறவைக் காவடி எடுத்து வந்து பூக்குழி இறங்கி நோ்த்திக்கடன் செலுத்தினா். இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

