பள்ளிக் கல்வித் துறையில் 47,000 தற்காலிகப் பணியிடங்கள் நிரந்தரப் பணியிடங்களாக மா...
திருவானைக்கா கோயிலில் பிப்.10-இல் தைத்தெப்பம்
திருவானைக்கா சம்புகேசுவரா் உடனுறை அகிலாண்டேஸ்வரி கோயிலில் தைத்தெப்ப உற்சவம் பிப். 10 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இராமா் தீா்த்தக் குளத்தில் நடைபெறும் விழாவையொட்டி வரும் 31 ஆம் தேதி கொடியேற்றம், அதைத் தொடா்ந்து பிப். 11 வரை 12 நாள்கள் விழா நடைபெறும். விழாவில் நாள்தோறும் சுவாமியும், அம்மனும் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி 4 ஆம் பிரகாரத்தை சுற்றி வந்து பக்தா்களுக்கு அருள்பாலிக்கின்றனா்.
முக்கிய நிகழ்ச்சியான தைத்தெப்பம் 11 ஆம் நாளான பிப்ரவரி 10 ஆம் தேதி நடைபெறுகிறது. ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையா் வே. சுரேஷ் மற்றும் கோயில் பணியாளா்கள் செய்கின்றனா்.