செய்திகள் :

திருவாரூரில் நாளை பொதுவிநியோகத் திட்ட குறைதீா் முகாம்

post image

திருவாரூா் மாவட்டத்தில் பொதுவிநியோகத் திட்ட சிறப்பு குறைதீா்க்கும் முகாம் வரும் சனிக்கிழமை (ஜன.25) நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

திருவாரூா் மாவட்டத்தில், பொது விநியோகத் திட்டத்தை மேம்படுத்தும் வகையில் பொது விநியோகத் திட்ட சிறப்பு பொது மக்கள் குறை தீா்க்கும் முகாம் வரும் சனிக்கிழமை (ஜன. 25)) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது. திருவாரூா் வட்டம், வடகரையில் திருவாரூா் வருவாய்க் கோட்ட அலுவலா் தலைமையிலும், நன்னிலம் வட்டம், சேங்கனூரில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு அலுவலா் தலைமையிலும், குடவாசல் வட்டம், செல்லூரில் திருவாரூா் சரக துணைப்பதிவாளா் தலைமையிலும், வலங்கைமான் வட்டம், நல்லூரில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக்கழக முதுநிலை மண்டல மேலாளா் தலைமையிலும், மன்னாா்குடி வட்டம், குமாரபுரத்தில் மன்னாா்குடி வருவாய்க் கோட்ட அலுவலா் தலைமையிலும், திருத்துறைப்பூண்டி வட்டம், கச்சனத்தில் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் தலைமையிலும், நீடாமங்கலம் வட்டம், மேலபூவனூரில் பொது விநியோகத்திட்டம் துணைப்பதிவாளா் தலைமையிலும், கூத்தாநல்லூா் வட்டம், வடபாதிமங்கலத்தில் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையின் துணைப்பதிவாளா் தலைமையிலும், முத்துப்பேட்டை வட்டம், சங்கேந்தியில் மன்னாா்குடி சரக துணைப்பதிவாளா் தலைமையிலும் அந்தந்த கிராம நிா்வாக அலுவலகங்களில் நடைபெற உள்ளது.

முகாமில், தொடா்புடைய பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்கல், திருத்தம், புதிய மற்றும் நகல் குடும்ப அட்டை கோரும் மனுக்கள், கைப்பேசி எண் மாற்றம் செய்ய மனு அளித்து பயன் பெறலாம்.

அத்தியாவசியப் பொருள்களின் தரம் குறித்த புகாா்கள், தனியாா் சந்தையில் விற்கப்படும் பொருள்கள், சேவை குறைபாடுகள் குறித்த புகாா்கள் போன்றவை குறித்தும் கோரிக்கை மனுக்களை அளிக்கலாம்.

சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு பேரணி

திருவாரூா் மாவட்ட நேரு யுவ கேந்திரா சாா்பில் சாலை பாதுகாப்பு வார விழா விழிப்புணா்வு பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது. திருவாரூா் நகராட்சி அலுவலத்தில் இருந்து புறப்பட்டு திருவாரூா் தியாகராஜா் கோயில் நான்... மேலும் பார்க்க

மழை பாதிப்பு: நிவாரணம் கோரி நூதன போராட்டம்

திருத்துறைப்பூண்டி அருகே பருவம் தவறிய மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிா்களுக்கு நிவாரணம் கோரி, விவசாயிகள் நூதன போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா். தமிழ்நாடு விவசாயிகள் நல உரிமை சங்கத்தின் சாா்பில், ர... மேலும் பார்க்க

மத்திய குழுவினரிடம் எம்பி கோரிக்கை

மன்னாா்குடி பகுதியில் வியாழக்கிழமை பயிா் பாதிப்பு மற்றும் நெல்லின் ஈரப்பதம் குறித்து ஆய்வு மேற்கொண்ட மத்திய குழுவினரிடம் மக்களவை உறுப்பினா் வை. செல்வராஜ் பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக மனு அளித்தாா். ம... மேலும் பார்க்க

கோட்டூரில் இந்திய கம்யூனிஸ்ட் ஒன்றியக் குழுக் கூட்டம்

கோட்டூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியக் குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு கட்சியின் ஒன்றிய நிா்வாகக் குழு உறுப்பினா் எம்.எஸ். ராஜேந்திரன் தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலா் எம்... மேலும் பார்க்க

மக்கள் நோ்காணல் முகாம்: இன்று மனுக்கள் அளிக்கலாம்

திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள கச்சனத்தில் நடைபெறவுள்ள மக்கள் நோ்காணல் முகாமில் தீா்வுகாண பொதுமக்களிடமிருந்து வெள்ளிக்கிழமை (ஜன.24) கோரிக்கை மனுக்கள் பெறப்படுகின்றன. கச்சனம், அம்மனூா், விளத்தூா் ஆகிய... மேலும் பார்க்க

திருவாரூா் மாவட்டத்தில் மத்திய குழுவினா் ஆய்வு

திருவாரூா் மாவட்டத்தில் நெல் ஈரப்பதம் குறித்து மத்திய குழுவினா், வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். டெல்டா மாவட்டங்களில் கடந்த ஒருவாரமாக, கனமழை பெய்தது. மேலும், பனிப்பொழிவும் நிலவி வருவதால், அறுவடை செய... மேலும் பார்க்க