செய்திகள் :

திருவாரூர்: 20 நாட்களில் 2 போலீஸார் தற்கொலை முயற்சி... நீடாமங்கலம் காவல் நிலையத்தில் என்ன நடக்கிறது?

post image

தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்தவர் குமார். போலீஸான இவர் கடந்த ஏழு ஆண்டுகளாகத் திருவாரூர் மாவட்ட காவல் நிலையங்களில் பணியாற்றி வருகிறார். தற்போது, நீடாமங்கலம் காவல் நிலையத்தில் எழுத்தராகப் பணிபுரிகிறார். இந்நிலையில் குமார், காவல் நிலையத்திற்குள்ளேயே கத்தியால் தனது இடது கையில் பல இடங்களில் கிழித்து தற்கொலைக்கு முயன்றதாகச் சொல்லப்படுகிறது. ஆய்வாளர் சந்தானமேரி முன்பு இந்த சம்பவம் நடந்ததாகப் பேசப்படுவதால் போலீஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பைக் கிளப்பியது.

சிகிச்சையில் தற்கொலைக்கு முயன்ற போலீஸ் குமார்
சிகிச்சையில் தற்கொலைக்கு முயன்ற போலீஸ் குமார்

தற்போது, குமார் தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கிறார். அவரது கைகளில் சுமார் 25 தையல் போடப்பட்டுள்ளது. இந்நிலையில் குமாரின் மனைவி மகேஷ்வரி, "ஆய்வாளர் சந்தானமேரி பலர் முன்னிலையில் எனது கணவரை அவமானப்படுத்தியுள்ளார். தெரியாத வேலையைக் கொடுத்துத் தொடர்ந்து சித்திரவதை செய்திருக்கிறார். இதனால் என் கணவர் தற்கொலைக்கு முயன்றார்" என்று குற்றம்சாட்டியுள்ளார்.

இதே போல் இருபது தினங்களுக்கு முன்பு பெண் தலைமைக் காவலர் சித்ரா, விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதிலும் சந்தானமேரி பெயர் அடிப்பட்டது. இது குறித்து துறை ரீதியிலான விசாரணை நடந்து வருவதாகச் சொல்லப்பட்ட நிலையில் தற்போது குமார் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இது குறித்து போலீஸ் வட்டாரத்தில் சிலரிடம் பேசினோம், "குமாருக்கு கம்ப்யூட்டர் ஆப்ரேட் செய்யத் தெரியாது. ஆனால் சந்தானமேரி அவரை வழக்குகள் குறித்த விபரங்களை கணினியில் பதிவேற்றச் சொல்லியுள்ளார். தனக்குத் தெரியாது மேடம் எனக் குமார் சொல்லியும் தொடர்ந்து அவருக்கு அந்த பணியை ஒதுக்கியுள்ளார். இதனால் மன உளைச்சலிலிருந்து வந்தார் குமார். இந்த நிலையில் பலர் முன்னிலையில் அவரைச் சந்தானமேரி திட்டி அவமானப்படுத்தியதாகத் தெரிகிறது.

நீடாமங்கலம் காவல் நிலையம்

இதையடுத்து, குமார் கத்தியால் கையில் கிழித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதே போல் தலைமைக் காவலர் சித்ராவும் இருபது தினங்களுக்கு முன்பு விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். சொந்தப் பிரச்னையில் தற்கொலைக்கு முயல்வதாக உயர் அதிகாரிகள் இந்த விவகாரங்களைக் கடந்து செல்கின்றனர். உரியக் கவனம் செலுத்தி நீடாமங்கலம் காவல் நிலையத்தில் என்ன நடக்கிறது என விசாரணை நடத்த வேண்டும். எந்த காரணமாக இருந்தாலும் மன உளைச்சலில் உள்ள போலீஸாருக்கு உரிய கவுன்சிலிங் கொடுப்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

ரயிலில் மாணவிக்குப் பாலியல் தொல்லை; திண்டுக்கல் ரயில் நிலையத்தில் இளைஞரை மடக்கிய போலீஸார்!

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த 26 வயது பெண் தூத்துக்குடியில் உள்ள தனியார் போட்டித் தேர்வு பயிற்சி மையத்தில் படித்து வருகிறார். அவருடைய தந்தைக்கு உடல்நிலை சரியில்லாததால் ஈரோடுக்கு செல்ல திட்டமிட்டார். அதன்... மேலும் பார்க்க

விஜய் படம் பாணியில் அரசு பேருந்து இருக்கையில் வைக்கப்பட்ட அரிவாள்; பொள்ளாச்சியில் அதிர்ச்சி!

கோவை மாவட்டம், பொள்ளாச்சி நகரின் மையப் பகுதியில் பழைய மற்றும் புதிய பேருந்து நிலையங்கள் எதிர் எதிரே இயங்கி வருகின்றன. புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பொள்ளாச்சி கிராமப் பகுதிகள், வால்பாறை மற்றும் க... மேலும் பார்க்க

மாஜி அமைச்சர் மகன் விமானத்தில் பேங்காக் கடத்தப்பட்டாரா? - போலீஸ் உத்தரவால் புனே திரும்பிய விமானம்!

மகாராஷ்டிராவில் துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ-வுமான தானாஜி சாவந்த் மகன் ரிஷிராஜ் சாவந்த் நேற்று மாலை புனே விமான நிலையத்தில் மர்ம நப... மேலும் பார்க்க

சென்னை: பாஜக பிரமுகர் மீது இளம்பெண் பாலியல் புகார்; விசாரணையில் வெளியான பகீர் பின்னணி

சென்னையில் உள்ள ஐடி நிறுவனத்தில் வேலை பார்க்கும் இளம்பெண் ஒருவர், சேலையூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றைக் கொடுத்தார்.அதில், ``நான் தற்போது ஐடி நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறேன். ... மேலும் பார்க்க

`வலித் தெரியாமல் அவன் வாழ்நாள் முடிந்துவிடக் கூடாது!’ - ரயில் கொடூரன் மீது கொதிக்கும் பெண்ணின் கணவர்

இந்தக் கட்டுரையை நீங்கள் படித்துக்கொண்டிருக்கும் நொடியிலும் ஏதோவொரு ஒரு மூலையில் பாலியல் அத்துமீறலில் யாரேனும் ஒரு சகோதாரி பாதிக்கப்பட்டுகொண்டிருக்கலாம் என்கிற அச்ச சூழல் உருவாகியிருக்கிறது.6-2-2025 அ... மேலும் பார்க்க

திருப்பதி லட்டு விவகாரம்: போலி ஆவணம், போலி நெய்... 4 பேர் கைது.. விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

ஆந்திர மாநிலத்தில், கடந்த ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியின் போது நியமிக்கப்பட்ட திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு லட்டு தயாரிப்புக்காக கொள்முதல் செய்த நெய்யில் கலப்படம் இருப்பதாக புகார் எழுந்தது. அறங்காவலர... மேலும் பார்க்க