ரூ.1 கோடி வெகுமதி: 30 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த நக்சல் தலைவரைக் காட்டிக்கொடுத்த ...
திறமையானவர்கள் அமெரிக்கா வருவது பிடிக்கும்! எச்-1பி விசா குறித்து டிரம்ப்!
திறமையானவர்கள் அமெரிக்காவுக்கு வருவதை தான் விரும்புவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் பிரசாரத்தின்போது, அமெரிக்கா்களுக்கு வேலைவாய்ப்புகள் அதிகரிக்கப்படும், சட்டவிரோத குடியேற்றம் தடுக்கப்படும், பிறப்புரிமையின் அடிப்படையில் வெளிநாட்டினரின் குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்கப்படாது ஆகிய முக்கிய வாக்குறுதிகளை டிரம்ப் அளித்திருந்தாா்.
இதனிடையே, அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும் நோக்கில் வெளிநாட்டவர்களுக்கு வழக்கும் எச்-1பி விசாவுக்கு அதிபராக பொறுப்பேற்றுள்ள டிரம்ப் கட்டுப்பாடுகள் கொண்டுவருவார் என்று அஞ்சப்படுகிறது.
இதையும் படிக்க : 18,000 இந்தியா்கள் நாடு திரும்புவாா்கள்?: அமெரிக்க அதிபா் டிரம்ப் கட்டுப்பாடு எதிரொலி
இந்த நிலையில், வெள்ளை மாளிகையில் ஆரக்கிள், சாஃப்ட்பேங்க் மற்றும் ஓபன் ஏஐ நிறுவனங்களின் நிர்வாகிகளுடன் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து டிரம்ப் பேசினார்.
“எச்-1பி விசா தொடர்பாக இருதரப்பு வாதங்களும் பிடித்துள்ளது. ஆனால், திறமையானவர்கள் நம் நாட்டுக்குள் வருவதை நான் விரும்புகிறேன். தகுதியில்லாத மற்றவர்களுக்கு பயிற்சி அளிக்க உதவும். பொறியாளர்கள் அளவில் அல்லாமல் அனைத்து தரப்பு பணியாளர்கள் நிலையிலும் நான் கூறுகிறேன்.
லேரி, மாஸா போன்றோர்களுக்கு திறமையான பொறியாளர்கள் தேவை, சில ஹோட்டல்களுக்கு சிறந்த வெயிட்டர்கள் தேவை. எந்த துறையாக இருந்தாலும், திறமையானவர்கள் நம் நாட்டுக்குள் வர வேண்டும்.
திறமையானவர்களை, சிறந்த மனிதர்களை, நம் நாட்டிற்குள் வர அனுமதிக்க வேண்டும். மேலும், நாங்கள் அதை எச்-1பி திட்டத்தின் மூலம் செய்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.
எச்-1பி விசா பயனர்களில் அதிகமானோர் இந்தியர்கள்தான். ஓராண்டுக்கு 65000 பேர் வேலைக்காகவும், 20000 பேர் உயர் படிப்புகளுக்காகவும் அமெரிக்காவுக்குச் செல்கிறார்கள்.
டிரம்பின் நெருங்கிய ஆதரவாளரும் தொழிலதிபருமான எலான் மஸ்க், எச்-1பி விசா மூலம் திறமையான பொறியாளர்கள் அமெரிக்காவுக்குள் நுழைவதை ஆதரிக்கும் சூழலில், டிரம்பின் பிற ஆதரவாளர்கள் அமெரிக்கர்களின் வேலையை அவர்கள் பறிப்பதாக குற்றச்சாட்டு எழுப்பி வருகின்றனர்.