செய்திகள் :

தில்லியின் அடுத்த முதல்வர் யார்? பாஜக இன்று ஆலோசனை!

post image

தில்லி பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றியடைந்துள்ள நிலையில், தில்லியின் அடுத்த முதல்வரை தேர்வு செய்ய பாஜக இன்று(பிப். 9)ஆலோசனை நடத்தவுள்ளது.

தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் ஆட்சியமைக்கத் தகுதி பெற்றுள்ள பாஜக 48 தொகுதிகளிலும், ஆம் ஆத்மி கட்சி 22 தொகுதிகளிலும் வென்றுள்ளன.

ஆம் ஆத்மியின் அமைப்பாளா் அரவிந்த் கேஜரிவால், துணை முதல்வா் மனீஷ் சிசோடியா, சத்யேந்தா் ஜெயின், செளரவ் பரத்வாஜ் உள்ளிட்ட முக்கியத் தலைவா்கள் பலரும் அதிா்ச்சித் தோல்வி அடைந்தனர்.

2020 தோ்தலில் எட்டு இடங்களில் மட்டுமே வென்ற பாஜக, இம்முறை கூடுதலாக 40 இடங்களில் வென்றுள்ளது.

இதையும் படிக்க: மகா கும்பமேளாவில் 41 கோடி பக்தர்கள் புனித நீராடல்!

இந்நிலையில், தில்லியில் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைக்க ஆயத்தமாகி வரும் பாஜக, அடுத்த முதல்வரை தேர்வு செய்வதற்கான ஆலோசனைக் கூட்டத்தை இன்று நடத்துகிறது.

முதல்வர் போட்டியில், அரவிந்த் கேஜரிவாலை வீழ்த்திய பர்வேஷ் சாஹிப் சிங், சுஷ்மா ஸ்வராஜின் மகள் பான்சுரி ஸ்வராஜ், மாநகராட்சி முன்னாள் கவுன்சிலர் ரேகா குப்தா உள்ளிட்டோர் உள்ளனர்.

மேலும் மாநில பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவா, பாஜக எம்பி மனோஜ் திவாரி ஆகியோரின் பெயர்களும் பரிசீலனையில் உள்ளதாகக் கூறப்படுகிறது.

பத்திரப்பதிவு அலுவலகங்கள் நாளை செயல்படும்: தமிழக அரசு

நாளை(பிப். 11) விடுமுறை நாள் என்றாலும் தைப்பூசத்தையொட்டி பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. பதிவு அலுவலகங்கள் நாளை காலை 10.00 மணி முதல் ஆவணப்பதிவு முடியும்வரை செயல்... மேலும் பார்க்க

லாஸ்லியாவின் ஜென்டில்வுமன் பட வெளியீட்டுத் தேதி!

லாஸ்லியாவின் ஜென்டில்வுமன் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.லிஜோமோல், ஹரிகிருஷ்ணன் நடிப்பில் உருவாகியுள்ள ஜென்டில்வுமன் படத்தை அறிமுக இயக்குநர் ஜோசுவா சேதுராமன் இயக்குகிறார்.கோமலாஹரி பி... மேலும் பார்க்க

86 ஆயிரம் மக்களுக்கு பட்டா வழங்க ஒப்புதல்! - முதல்வர் ஸ்டாலின்

தமிழ்நாட்டில் 86 ஆயிரம் மக்களுக்குப் பட்டா வழங்க அமைச்சரவையில் ஒப்புதல் வழங்கி ஏழை, எளிய மக்களின் 63 ஆண்டுகாலப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். சர்க்கார் ப... மேலும் பார்க்க

தண்டனைக் கைதிகளுக்கு விடுப்பு வழங்க தடையில்லை! சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு!

மேல்முறையீட்டு மனுக்கள் நிலுவையில் இருந்தாலும் தண்டனைக் கைதிகளுக்கு விடுப்பு வழங்க தடையில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு மனுக்கள் நிலவையில் இருக... மேலும் பார்க்க

பிப். 13-ல் போக்குவரத்து தொழிலாளர்களுக்கான ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை!

பிப். 13-ல் போக்குவரத்து தொழிலாளர்களுக்கான 15-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை நடைபெறும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.அண்ணா தொழிற்சங்கத்தின் தலைமையின் கீழ் தேமுதிக, புரட்சி பாரதம் உள்ளிட்ட 28 சங்கங... மேலும் பார்க்க

அதிமுக இபிஎஸ் கட்டுப்பாட்டில் இருக்கிறதா? அமைச்சர் ரகுபதி கேள்வி

அதிமுக இபிஎஸ் கட்டுப்பாட்டில் இருக்கிறதா? என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கேள்வி எழுப்பியுள்ளார்.சென்னை தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயத்தில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போ... மேலும் பார்க்க