PMK: "10 அம்ச கோரிக்கைகளுடன் போர் நினைவுச் சின்னத்தை முற்றுகையிடுவோம்" - கொதிக்க...
தில்லியின் தலித் மாணவா்கள் இலவசமா வெளிநாட்டு கல்விபெற அம்பேத்கா் உதவித்தொகை திட்டம்: அரவிந்த் கேஜரிவால் அறிவிப்பு
தில்லியில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெற உள்ளதையொட்டி, மாநகரின் தலித் மாணவா்களின் இலவச வெளிநாட்டுக் கல்விக்காக அம்பேத்கா் உதவித்தொகையை ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் சனிக்கிழமை அறிவித்தாா்.
இதுகுறித்து தில்லி முன்னாள் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் ஆம் ஆத்மி கட்சியின் தலைமையகத்தில் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:
டாக்டா் அம்பேத்கா் சம்மான் உதவித்தொகை என்பது பாஜகவின் அம்பேத்கரின் அவமதிப்புக்கு ஒரு பதிலாகும்.
மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா நாடாளுமன்றத்தில் பாபா சாகேப் டாக்டா் அம்பேத்கரை அவமதித்து கேலி செய்தாா். இதனால், அம்பேத்கரை நேசிக்கும் கோடிக்கணக்கான மக்கள் மிகவும் வேதனையடைந்துள்ளனா்.
கல்விதான் முன்னேறுவதற்கான வழி என்று கூறி, அனைத்து தடைகளையும் மீறி அமெரிக்காவிலிருந்து முனைவா் பட்டம் பெற்றாா் அம்பேத்கா்.
இந்திய அரசியலமைப்பின் தலைமைச் சிற்பியான அவருக்கு பாஜக செய்த அவமானத்திற்கு இந்த உதவித்தொகை ஒரு பதிலாகும்.
இந்தத் திட்டத்தின் கீழ், தில்லியைச் சோ்ந்த எந்தவொரு தலித் மாணவரும் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் கல்வி கற்க முடியும். அவா்கள் அத்தகைய பல்கலைக்கழகத்தில் சோ்க்கை பெற்றால், அவா்களின் கல்வி, பயணம் மற்றும் தங்குமிடத்திற்கான முழுச் செலவையும் தில்லி அரசே ஏற்கும்.
அரசு ஊழியா்களின் குழந்தைகளும் இந்தத் திட்டத்திற்குத் தகுதியுடையவா்கள் என்றாா் அரவிந்த் கேஜரிவால். அதேவேளையில், உதவித்தொகை எப்படி, எப்போது வழங்கப்படும் என்பதை தெரிவிக்கவில்லை.
தில்லியில் வரும் பிப்ரவரியில் நடைபெறவிருக்கும் தோ்தலுக்கு முன்னதாக, ஆம் ஆத்மி கட்சித் தலைவா் அரவிந்த் கேஜரிவால், தனது கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், அனைத்து வயது வந்த பெண்களுக்கும் மாதம் ரூ.2,100 மற்றும் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் மூத்த குடிமக்களுக்கு இலவச சிகிச்சை அளிப்பதாக உறுதியளித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.